Friday, December 18, 2009

பக்திப்ரஹ்வபுரப்ரபஞ்ஜனஜடாவாடீஸநீடஸ்புர-

சூடாரக்வதவாஸனாபரிமளஸ்தயாநே ஸ்தும: பாதுகே

ரங்கக்ஷோணிப்ருதங்க்ரிபத்மயுகளீபூர்ணப்ரபத்தே பலம்

நிச்சிந்வந்தி விபச்சித:சமதநா: நித்யம் யதுத்தம்ஸனம் 38

 

பெருமாள் பாதுகைகளை சிவன் எப்பொழுதும்  தன் தலையில் வைத்துக்கொண்டிருக்கிறார்.  அதனால் சிவன் தலையிலுள்ள கொன்னைப்பூவின் வாஸனையுடனிருக்கிறது பாதுகை.  பெரியோர்கள், ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளில் சரணாகதி செய்வது எப்போதும் பாதுகையை சிரஸில் வைத்துக்கொள்வதற்காகத்தான் என்று சொல்லுகிறார்கள்.  அப்படிப்பட்ட பெருமை பொருந்திய பாதுகைகளை ஸ்தோத்திரம் பண்ணுகிறோம்.

पेरुमाळ् पादुकैकळै शिवन एप्पोज़ुतुम् तन् तलैयिल् वैत्तुक्कोण्डिरुक्किरार्. अथनाल् सिवन् तलैयिलुळ्ळ कोन्नैपुविन् वासनैयुडनिरुक्किरतु पादुकै. पेरियोर्कळ् श्रीरङ्गनाथनुडैय तिरुवडिकळिल् शरणागति शेयवतु, एप्पोतुम् पादुकैयै शिरसिल् वैत्तुक्कोळ्वतर्काकत्तान् एन्रु सोल्लुकिरार्गळ्. अप्पडिप् पठ्ठ पेरुमै पोरुन्धिय पादुकैकळै स्थोरम् पण्णुकिरॊम्

 

मातर्माधवपादुके तव गुणान् क; स्तोतुमस्तोकधी:

कोटीरेषु यदर्पणप्रणयिनां सेवाक्षणे स्वर्गिणाम्

अन्योन्यं क्षिपतामहंप्रथमिकासम्मर्दकोलाहलं

विष्वक्सेनविहारवेत्रलतिकाकम्पश्चिराल्लुम्पति 39

மாதர்மாதவபாதுகே தவ குணான் க; ஸ்தோதுமஸ்தோகதீ:

கோடீரேஷுயதர்பணப்ரணயினாம் ஸேவாக்ஷணே ஸ்வர்க்கிணாம்

அந்யோந்யம் க்ஷிபதாமஹம்ப்ரதமிகாஸம்மர்த்தகோலாஹலம்

விஷ்வக்சேநவிஹாரவேத்ரலதிகாகம்பச்சிரால்லும்பதி

 

லோகமாதாவான பாதுகையே! தேவதைகள் பெருமாளை ஸேவிக்க வருகிறபொழுது, தங்கள் தலையில் பாதுகையை ஸாதித்துக் கொள்வதற்காக ஒருவருக்கொருவர் மேல் விழுந்து எனக்குத்தான் முன்பு என்று நெருக்கிக் கொண்டு பெரியசப்தம் போடுகிறார்கள்.விஷ்வக்ஸேநர், தன் கையில் விளையாட்டுக்காக வைத்துக்கொண்டிருக்கிற பிரம்பால் அடித்த அந்த சப்தத்தை வெகு சிரமப்பட்டு  அடக்குகிறாரோ அப்படிப்பட்ட உனது பெருமையையறிந்து சொல்வதற்கு  எவருக்குத்தான் புத்தியிருக்கிறது. ப்ரும்ம ருத்ராதி தேவதைகளும் சபலத்துக்குட்பட்டிருக்கிறார்களேயொழிய ஆசையில்லாதவர்கள் ஒருவருமில்லை. அந்த தேவதைகள் நம்மாழ்வார் மாதிரி நமக்கு வரவில்லையேயென்று வியஸனப்படுகிறார்கள்

 

लॊकमातावान पादुकैयॆ दॆवदैकळ् पेरुमाळै शॆविक्क वरुकिरपोऴुतु, तङ्कळ् तलैयिल् पादुकैयै शातितुक् कोळ्वतर्काक ओरुवरुक्कोरुवर् मॆल् विऴुन्दु एनक्कुततान् मुन्बु एनृ नेरुक्किक् गोण्डु पेरियसब्तम् पॊडुकिरार्गळ्.विश्वक्शॆनर्, तन् कैयिल् विळैयाट्टुक्काक वैत्तुक्कोण्टिरुक्किर पिरम्बाल् अटित्थ अन्द सबत्तै वेगु सिरमप्पट्टु अटक्कुगिरारॊ अप्पटिप्पट्ट उनतु पेरुमैयैयरिन्दु सोल्वतर्क्कु  एवरुक्कुत्तान् बुद्धियिरुक्किरतु. भ्रुह्मरुद्रादि दॆवतैकळुम् सबलत्तुक्कुट्पड्डिरुक्किरार्गळॆयोऴिय आसैयिल्लातवर्गळ् ओरुवरुमिल्लै. अन्त दॆवतैकळ् नम्माऴ्वार् मातिरि नमक्कु वरविल्लैयॆयेनृ वियशनप्पडुकिरार्गळ्. 39

 

யோஷித்பூதத்ருஷந்த்போடசகடஸ்தேமாநி வைமாநிக

ஸ்ரோதஸ்விந்யுபலம்பநாநி பஸிதோதஞ்சத்பரீக்ஷிந்தி ச

துரத்யாதிஷ்வபி துர்வசநாநி பதயோ: க்ருத்யாநி மத்வவே யத்

தத்தே தத் ப்ரணயம் ததேவ சரணத்ராணம் வ்ருணே ரங்கிண:

 

यॊषिद्भुअतद्रुषन्तयपॊढशकटस्थॆमानि वैमानिक

स्रॊतस्विन्युपलम्भनानि भसितॊद्ञ्च्त्परीक्षिन्ति च

दूत्यादिष्वपि दुर्वचानि पदय़ो:क्रुत्यानि मत्वॆव यत्

धत्तॆ तत्प्रणयं तदॆव चरणत्राणं व्रुणॆ रङ्गिण:

 

லகத்தில் ஒரு மனிதனுக்கு “கால்” என்ற அவயவமானது மிகத் தாழ்ந்தது என்று சொல்லுகிறார்கள். அந்தக்காலில் இந்தப்பாதுகையிருக்கிறது. இதற்கு இவ்வளவு பெருமையுண்டென்று சொல்லலாமாவென்றால், சொல்லுகிறார். பெருமாளின் திருமேனிக்குள் திருவடி மிகவும் உயர்ந்தது.  ஆகையால்தான் பாதுகை அத்தோடு ஸ்நேஹம் பண்ணினது.  எப்படியென்றால், பெருமாள் திருவடி ஒரு கல்லை அகலியை என்ற பெண்ணாகச் செய்தது, சகடாஸுரனைக்கொன்றது.திரிவிக்ரமாவதாரத்தில் கங்கையையுண்டாக்கிற்று.  சாம்பலில் பரீஷித்து என்று மஹாராஜாவை உண்டாக்கினது. இதெல்லாம் பரத்வத்தை(உயர்ந்த தன்மையை) தெரிவிக்கிறது. தர்மபுத்ரருக்கு தூது சென்றது. இது ஸெளலப்ய கார்யம்.  ஆகையால் திருவடிக்கு பெரிய மேன்மை யிருக்கிறதென்று எண்ணினது போல் ஸர்வகாலமும் அத்திருவடியை விட்டுப் பிரியாமல் ஸ்நேஹத்துடன் இருக்கும் அப்பாதுகைகளை சரணமடைகின்றேன்.  இப்போதும் பெரியோர்கள் திருவடியில் தீர்த்த த்தைச் சேர்த்து எல்லோரும் சாப்பிடுவார்கள்.  பெருமாள் திருவடிக்கு இப்படிப்பட்ட பெருமையிருப்பதால்தான் ஆழ்வார் எப்போதும் திருவடியைப் பற்றியே பேசுகிறார்.

 

No comments:

Post a Comment