ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்-ப்ரபாவ பத்ததி श्रीपादुका सहस्रम प्रभावपध्दति:
ஸ்லோகம் 43
அம்புந்யம்புநிதேரநந்யகதிபி: மீநை:கியத்கம்யதே
க்லேசேநாபி கியத்வ்யலங்கி ரபஸோத்துங்கை:ப்லவங்கேச்வரை:
விஞ்ஞாதா கியதீ புன: க்ஷிதிப்ருதா மந்தேந கம்பீரதா
கிம்தை:கேசவபாதுகாகுணமஹாம்போதே: தடஸ்தா வயம்.
अम्बुन्यम्बुनिधेरनन्यगतिभिर्मिनै:कियद्गम्यतॆ
क्लॆशॆनापि कियद्वयलङ्घि रभसोत्तुङगै:प्लवङगॆश्वरै:
विञाता कियाति पुन;क्षितिप्रुता मन्थॆन गम्भीरता
किन्तै:कॆशवपादुकागुणमहाम्भॊधॆ: तटस्था वयम्
மீன்கள் ஜலத்திலேயே ஸஞ்சரிக்கின்றன், அப்படியிருந்தும் சமுத்திரத்திலே கொஞ்சதூரம்தான் போய்க்கொண்டிருக்கின்றன. மிகவேகசாலிகளான ஹனுமார், முதலிய வானரர்களும் கொஞ்சதூரம்தான் தாண்டினார்கள், மந்தரபர்வதம் சமுத்திரத்தின் ஆழத்தை கொஞ்சம்தான் கண்டது. இந்த அல்பஸமுத்திரத்திலேயே முழுமையும் போகவும் தாண்டவும், ஆழத்தை அறியவும் முடியவில்லை என்று நினைத்து, பாதுகைகளின் குணங்களாகிற பெருங்கடலில் இக்கரையிலேயே இருந்துவிட்டேன். जानाति मन्थाचल: என்று ஒரு கவி சொன்னான். அதுவும் தப்பு என்று அபிப்ராயம். तटस्था: என்பதனால் நான் மத்தியஸ்தமாகச் சொல்லுகிறேனென்று அருளிச் செய்கிறார். ஆழ்வாருடைய ப்ரபாவத்திற்கு எல்லையில்லை என்பது இதற்கு உட்கருத்து.
No comments:
Post a Comment