प्रतय्क्षयन्ति परिशुद्धियो यथावत रामायणे रघुपुरन्दरपादरक्षे
शक्ष्व्तप्रपञ्चितमिदंपरयैव व्रुत्तया संक्षेपविस्तरदशासु तवानुभावम्
ப்ரத்யக்ஷயந்தி பரிசுத்ததியோ யதாவத் ராமாயணே ரகுபுரந்தர பாதரக்ஷே
சச்வத் ப்ரபஞ்சித மித்ம்பரயைவ வ்ருத்த்யா ஸம்க்ஷேபவிஸ்தரதசாஸூ தவாநுபாவம்.
ஸ்ரீமத்ராமாயண மஹாபாரதங்களில் பாதுகையின் அல்லது பெருமாள் பக்தர்களின் பெருமையைப்பற்றி எங்கே சொல்லி இருக்கிறதென்றால் ஸ்ரீமத் ராமாயண பாரதங்களில் இவர்களின் பெருமை சொல்லியிருக்கிறதென்பதை தெளிந்த புத்தியுள்ளவர்கள் கண்ணால் பார்ப்பது போல் காண்கிறார்கள். ஸ்ரீமத் ராமாயண கதை முழுவதையும் நூறு ஸ்லோகமுள்ள ஸ்ங்க்ஷேப ராமாயணத்தில் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறது. அவ்விடத்திலும் பாதுகையின் பெருமையைப் பற்றி சொல்லியிருக்கிறது. மேலும் விஸ்தாரமாயும் சொல்லியிருக்கிறது. அப்படிப்பட்ட உனது பெருமையை கலக்கமில்லாத அறிவு உடையோர்கள் காண்கிறார்கள். “परिशुद्धधिय:”
என்பதற்கு கருத்து-உலகில் பெரும்பாலும் எல்லோருடைய புத்தியும் கலங்கியேயிருக்கிறது. அது தெளிவதற்கு மூன்று காரணமுண்டென்று ஸ்ரீதேசிகன் அருளிச்செய்திருக்கிறார். அதாவது, “திருமுகப்பாசுரமும், ஸதாசாரியாநுக்ரஹமும் ஸத்ஸம்ப்ரதாயமும்” என்று, ஸ்ரீமத் ராமாயணத்தில், ‘பொய் சொல்லக்கூடாது, விரோதிகளிடத்திலும் தயையுடனிருக்கவேண்டும், எப்படிப்பட்ட கஷ்டம் நேர்ந்தாலும் பொறுமை வேண்டும், கர்வம் கூடாது ஒழிவு வேண்டும், தாய் தகப்பன் சொன்ன வார்த்தையைக் கேட்க வேண்டும், ஒரு காரியத்தை ஆரம்பிக்கும்போது இக்கார்யம் இப்படித்தான் முடியுமென்று தவறாத தெளிந்த யோஜனை வேண்டும்” இவை முதலான அனேக சங்கதிகLLள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஸ்ரீமத் ராமாயணத்தை நெட்டுருவாகச் சொல்லுகிறவர்களும் இந்த ஸங்கதிகள் தன்னுடைய அனுஷ்டானத்துக்கு வந்ததா? வரவில்லையா? என்பதை கொஞ்சமேனும் நினைக்கிறார்களில்லை. ஆத்மாவைப் பற்றிச் சொல்லுகிற எல்லாப் புஸ்தகங்களிலும் தன்னுடைய தாழ்மையை நினைக்கவேண்டுமென்றே எழுதியிருக்கிறது. வித்வான்களெல்லாரும் இதைப் பற்றியே உபந்நியாஸஞ் செய்கிறார்கள். முன்னிருந்த பெரியோர்கள் தன்னைக்கீழ்ப்பட்டவனென்று சொல்லியிருப்பதெல்லாம் நமக்காகத்தானென்றும் சொல்லுவார்கள். ஆகிலும் ஒருவருக்கும் தனது தாழ்மை தெரிகிறதில்லை. தனது தாழ்மை தோன்றினால் பிறர் வைதால் கோபம் வாராதென்று தேசிகன் அருளிச்செய்திருக்கிறார். அவ்வடையாளமுள்ளவன் இவ்வுலகில் ஒருவனாகிலும் கிடைப்பது மிக அரிது. ஆகையால் முன் சொன்ன மூன்று காரணங்களால் தெளிந்த புத்தியுள்ளவர்களுக்கு எல்லா நல்ல புஸ்தகங்களிலும் நல்ல அபிப்ராயம் தோன்றும். அதனால் நல்ல ஸௌக்யத்தையடைவார்கள்.
35. அல்பச்ருதைரபி ஜனைரநுமீயஸே த்வம்
ரங்கேசபாது நியதம் நிகமோபகீதா
ஸாரம் ததர்த்தமுபப்ருஹ்மயிதும் ப்ரணீதம்
ராமாயணம் தவ மஹிம்நி யத: ப்ரமாணம்.
अल्पश्रुतैरपि जनैरनुमीयसे त्वम
रङ्गेशपादु नियतँ निगमोपगीता
सारँ तदर्थमुपब्रुह्मनियितुँ प्रणीतम
रामायणम तव महिम्नि यत: प्रामाणम्
இந்தப்பாதுகையைப்பற்றி வேதத்தில் சொல்லியிருக்கிறதாவென்றால், வேதங்களெல்லாமறிந்தவர்கள் “இந்த இடத்தில் பாதுகையின் பெருமையைப் பற்றி சொல்லியிருக்கிறது” என்று தெரிந்து கொள்கிறார்கள். சிறிது வேதபாகத்தைத் தெரிந்தவர்கள்கூட”பாதுகையின் மஹிமை வேதத்தில் சொல்லியிருக்கிறது” என்று ஊகித்துக்கொள்கிறார்கள். எப்படியென்றால், கொஞ்சம் வேதாத்யயனம் பண்ணினவர்களும் அவசியமாய் அறிய வேண்டியதான உயர்ந்த் வேதார்த்தங்களை வால்மீகி மஹருஷியானவர் ஸ்ரீமத்ராமாயணத்தில் சொல்லியிருக்கிறார். அதில் பாதுகையின் பெருமையப் பற்றிச் சொல்லியிருக்கிறார். வேதத்தில் பாதுகா ப்ரபாவமில்லாத போனால் ராமாயணத்தில் அதைப்பற்றிச் சொல்லுவாரா? மூலத்தில் இல்லாத ஸங்கதிகளை வியாக்யானத்தில் சொல்லுவார்களா என்கிற யுக்தியினால் ஊஹிக்கிறார்கள்.
इन्दप्पादुकैयैप्प्ठ्री वेदत्तिल सोल्लियिरुक्किरदावेन्राल्, वेदङकळेल्लामरिन्दवर्कळ्
“इन्द इडत्तिल पादुकैयिन पेरुमैप्पठ्रि सोल्लियिरुक्किरतु” एन्रु तेरिन्दुकोळ्किरार्गळ्.
सिऱिदु वेदभागात्तै तेरिन्दवर्कळ्कूड “पादुकैयिन् महिमै वेदत्तिल सोल्लियिरुक्किरतु एन्रु ऊहित्तुक्कोळ्किरारगळ्. एप्पडियेन्ऱाल कोनजम् वेदाध्ययनम पण्णिनवर्गळुम अवशियमाय अऱिय वेण्डियतान उयर्न्द वेदार्तङगळै वालमीगी महरुषियानवर श्रीमतरामायणत्तिल सोल्लियिरुक्किरार्. अत्तिल पादुकैयिन पेरुमैयैप पठ्रिच सोल्लियिरुक्किऱार् वेदत्तिल पादुका प्रभावमिल्लादु पोनाल रामायणत्तिल आतैप्पठ्रि सोल्लुवारा? मूलत्तिल इल्लाद सङ्गतिकळै व्याक्यान्त्तिल सोल्लुवार्कळा एन गिऱ युक्तियिनाल ऊहीक्किरार्गळ्.
No comments:
Post a Comment