
ஸ்லோகம் 52
तटभुवि यमुनायास्तस्थुषि यन्निवेशात्
वहति निगमशाखावैभवं नीपशाखा
पदकमलमिदं तत्मादुके रङ्गभर्तु:
त्वयि भजति विभूतिं पश्य शाखानुशाखाम्
தடபுவி யமுநாயாஸ்தஸ்துஷீ யந்நிவேஶாத்
வஹதி நிகமசாகாவைபவம் நீபசாகா
பதகமலமிதம் தத்பாதுகே ரங்கபர்து:
த்வயி பஜதி விபூதிம் பச்ய சாகாநுசாகாம்
ஏ பாதுகையே! க்ருஷ்ணாவதாரத்தில் யமுனைக் கரையிலிருக்கும் மரங்களின் கிளைகள் கண்ணனுடைய திருவடியின் ஸம்பந்தத்தினால் வேதம் போலாகி விட்டன. அப்படிப்பட்ட திருவடி கூட உன்னிடத்திலிருப்பதால் விசேஷமான பெருமையையடைகிறது. ஆழ்வார் பாடிய ஸ்தலத்தை திவ்ய தேசம் என்று சொல்கிறார்கள் என்பது உட்கருத்து
स्लॊक: 53
शिरसि विनिहितायां भक्तिनम्रे भ्वत्यं
सपदि तनुभृतस्तामुन्नतिं प्राप्नुवन्ति
मधुरिपुपदरक्षॆ यद्वशॆनैव तेषां
अनितरसुलभं तद् धाम् हस्तपचेयम्
சிரஸி விநிஹிதாயாம் பக்திநம்ரே பவத்யாம்
ஸபதி தநுப்ருதஸ்தாமுந்நதிம் ப்ராப்நுவந்தி
மதுரிபுபதரக்ஷே யத்வசேனைவ தேஷாம்
அநிதரஸுலபம் தத் தாம ஹஸ்தாபசேயம் 53
ஏ பாதுகையே ப்ராணிகள் உன்னிடத்தில் பக்தியால் குனிந்த தங்கள் தலைகளில் உன்னை வைத்துக் கொண்டால், உன்னிடத்தில் பக்தியில்லாதாவர்களால் அடையமுடியாதபடி மிகவும் உயர்ந்த தேசத்திலே இருக்கிற பெருமாளைக் கையாலே எட்டும்படியான உயரத்தை(மேன்மையை) அடைகிறார்கள். ஆசார்யர்களை பக்தியுடன் வணங்கினால் பெருமாளைக்கையால் பிடிக்கலாம் என்பது உட்கருத்து