Sunday, October 10, 2010


ஸ்லோகம் 52

तटभुवि यमुनायास्तस्थुषि यन्निवेशात्

वहति निगमशाखावैभवं नीपशाखा

पदकमलमिदं तत्मादुके रङ्गभर्तु:

त्वयि भजति विभूतिं पश्य शाखानुशाखाम्

தடபுவி யமுநாயாஸ்தஸ்துஷீ யந்நிவேஶாத்

வஹதி நிகமசாகாவைபவம் நீபசாகா

பதகமலமிதம் தத்பாதுகே ரங்கபர்து:

த்வயி பஜதி விபூதிம் பச்ய சாகாநுசாகாம்

பாதுகையே! க்ருஷ்ணாவதாரத்தில் யமுனைக் கரையிலிருக்கும் மரங்களின் கிளைகள் கண்ணனுடைய திருவடியின் ஸம்பந்தத்தினால் வேதம் போலாகி விட்டன. அப்படிப்பட்ட திருவடி கூட உன்னிடத்திலிருப்பதால் விசேஷமான பெருமையையடைகிறது. ஆழ்வார் பாடிய ஸ்தலத்தை திவ்ய தேசம் என்று சொல்கிறார்கள் என்பது உட்கருத்து

स्लॊक: 53

शिरसि विनिहितायां भक्तिनम्रे भ्वत्यं

सपदि तनुभृतस्तामुन्नतिं प्राप्नुवन्ति

मधुरिपुपदरक्षॆ यद्वशॆनैव तेषां

अनितरसुलभं तद् धाम् हस्तपचेयम्

சிரஸி விநிஹிதாயாம் பக்திநம்ரே பவத்யாம்

ஸபதி தநுப்ருதஸ்தாமுந்நதிம் ப்ராப்நுவந்தி

மதுரிபுபதரக்ஷே யத்வசேனைவ தேஷாம்

அநிதரஸுலபம் தத் தாம ஹஸ்தாபசேயம் 53

ஏ பாதுகையே ப்ராணிகள் உன்னிடத்தில் பக்தியால் குனிந்த தங்கள் தலைகளில் உன்னை வைத்துக் கொண்டால், உன்னிடத்தில் பக்தியில்லாதாவர்களால் அடையமுடியாதபடி மிகவும் உயர்ந்த தேசத்திலே இருக்கிற பெருமாளைக் கையாலே எட்டும்படியான உயரத்தை(மேன்மையை) அடைகிறார்கள். ஆசார்யர்களை பக்தியுடன் வணங்கினால் பெருமாளைக்கையால் பிடிக்கலாம் என்பது உட்கருத்து

No comments:

Post a Comment