
सकृदपि किलमूर्धना शार्ङगिण:पादुके त्वां
मनुजमनुवहन्तं देहबन्धव्यापाये
उपचरति यथार्हन्देववर्गस्त्वदीय:
स तु नियमितभृ जोषमास्ते क्रुतान्त:45
ஸக்ருதபி கிலமூர்த்னா சார்ங்கிண: பாதுகே த்வாம்
மனுஜமனுவஹந்தம் தேஹபந்தவ்யபாயே
உபசரதி யதார்ஹம்தேவவர்க்கஸ்த்வதீய:
ஸ து நியமிதப்ருத்யோ ஜோஷமாஸ்தே க்ருதாந்த:
பெருமாளுடைய பாதுகையை ஒரு தரமாவது தலையில் வஹித்துக்கொண்டவர்களை இறந்து போகும்போது, உனது பரிஸாரகர்களான நித்யஸூரிகள் பரமபதத்திற்கு அழைத்துக்கொண்டு போகிறார்கள். யமனும் அவன் வேலைக்காரர்களும் நடுங்கிகொண்டு ஸமீபத்திலேயே வருகிறதில்லையென்று சாஸ்த்திரங்களில் சொல்லியிருக்கிறது.
பதஸரஸிஜமேதத் பாதுகே ரங்கபர்த்து:
ப்ரதிநிதிபதவீம் தே காஹதே ஸ்வேந பூம்நா
ததிதமபரதா சேத் திஷ்டதஸ்தஸ்ய நித்யம்
கதமிவ விதிதார்த்தா: த்வாம் பஜந்தே மஹாந்த:46
पदसरसिजमेतत् पादुके रङगभर्तु:
प्रतिनिधिपदविं ते गाहते स्वेन भूम्ना
तदिदमपरथा चेत् तिष्टतस्तस्य नित्यं
कथमिव विदितार्था: त्वां भजन्ते महान्त:
ஏ பாதுகையே எல்லாமறிந்த பெரியவர்கள் கூட கோயிலுக்குப் போனால் உன்னையேன் தலையில் வைத்துக்கொள்கிறார்கள். திருவடியை ஏன் தலையில் வைத்துக்கொள்கிறதில்லை என்றால், நீ தான் முதலாவது, திருவடிகள் உனக்குப் பதிலாக இருந்து இரண்டாவதாகவே ஆகின்றன. பெருமாளைக் காட்டிலும் ஆசார்யர்கள் தான் உயர்ந்தவர்கள் என்பது உட்கருத்து.
47. ச்ருதிசிரஸி நிகூடம் கர்மணாம் சோதிதாநாம்
த்வதவதிவிநிவேஸம் நாதிகந்தும் க்ஷமாணாம்
பரிஹஸதி முராரே பாதுகே பாலிசாநாம்
பகவதபரிசேஷாந் பண்டிதோ நாமயஜ்ஞாந்
त्वदवधिविनिवेशं नाधिगन्तुं क्षमाणाम्
परिहसति मुरारे: पादुके बालिशानां
पशुवधपरिशेषान् पण्दितो नामयज्ञन्
जनयितुमल्मर्घ्यन्दैत्य्जित्पादरक्षे
नमति महति देवे नाकसिन्धोर्विशिर्णा:
मुहुरहिपतिचूडामौलिरत्नभिघातात्
परिणतलकिमान:पाथसामूर्मयस्ते 48
ஜநயிதுமலமர்க்யம் தைத்யஜித்பாதரக்ஷே
நமதி மஹதி தேவே நாகஸிந்தோர்விஸீர்ண:
முஹுரஹிபதிசூடாபதிமௌளிரத்நாபிகாதாத்
பரிணதலகிமாநா: பாதாஸாமூர்மயஸ்தே 48
ஏ பாதுகையே! உன்னைச் சிவன் தலை வணங்கி ஸேவிக்கிறார். அவருடைய தலையில் கங்கையும் பாம்பும் இருக்கிறது. அப்பாம்பின் தலையிலிருக்கும் ரத்தினத்தில் கங்கையின் ஜலம் மோதுகிறது. அதனால் துளித்துளியாய் விழுகின்ற கங்கா ஜலத்தைப்போல் உன்னையாரதிப்பதற்கு ஸமர்ப்பிக்கின்ற அர்க்கிய தீர்த்தங்களோவென்று தோன்றும்படியாயிருக்கிறது
பதஸரஸிஜயோஸ்த்வம் பாதுகே ரங்கபர்த்து:
மநஸி முநிஜநாநாம் மௌளிதேசே ச்ருதீநாம்
வசஸி ச ஸுகவீநாம் வர்த்தஸே நித்யமேகா
ததிதமவகதம் தே சாச்வதம் வைச்வரூப்யம் ४९
पदसरसिजयोस्त्वं पादुकॆ रङगभर्तु:
मनसि मुनिजनानां मौलिदॆशॆ श्रुतिनाम्
वचसि च सुकवीनां वर्तसॆ नित्यमेका
ஏ பாதுகையே நீ ஒன்றாயிருந்தும் அனேக இடங்களில் எப்பொழுதுமிருக்கிறாய். அதனால் கிருஷ்ணனைப் போல் உனக்கும் அனேக சரீரமிருக்கிறதென்று எல்லாரும் அறிகிறார்கள். அதாவது, பெருமாள் திருவடியிலேயும் ருஷிகளின் மனதிலேயும், வேதாந்தகளிலும், கவி௯ளுடைய வாக்கிலேயுமிருக்கிறாய். பெருமாள் உன்னைத் திருவடிகளில் ஸாற்றிக் கொண்டிருக்கிறார். உபநிஷத் உன்னைப் பற்றிச் சொல்கிறது. முனிவர்கள் உன்னைத் தியானிக்கிறார்கள். கவிகள் உன்னை ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள்
No comments:
Post a Comment