
ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீமத்நம்மாண்டவன் வ்யாக்யானம்-ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம்
ஸ்லோகம் 50
परिसरविनतानां मूर्ध्नि दुर्वणपङ्क्तिं
परिणमयसि शौरे: पादुके त्वं सुवर्णम्
कुहकजनविदूरे सत्पथे लाब्ध वृत्ते:
कनु खलु विदितस्ते कोप्यसौ धातुवात:
பரிஸரவிநதாநாம் மூர்த்நி துர்வர்ணபங்க்திம்
பரிணமயஸி சௌரே: பாதுகே த்வம் ஸுவர்ணம்
குஹகஜநவிதூரே ஸத்பதே லப்தவ்ருத்தே:
க்வநு கலு விதிதஸ்தே கோப்யஸௌ தாதுவாத:
ஏ பாதுகையே உன்னுடைய ஸமீபத்தில் வந்து ஸேவித்தவர்களுடைய தலையிலே ப்ரம்மா கெட்ட எழுத்து எழுதியிருந்தாலும் அதையும் நீ நல்லதாய் மாற்றி விடுகிறாய்.
அதாவது கெட்டவனாயிருந்தாலும் உன்னை வந்து ஸேவித்தால் அவன் நல்லவனாகிவிடுகிறான்."दुर्वणम्" என்று வெள்ளிக்கும், "सुवर्णम्"
என்று தங்கத்திற்கும் பெயர். வெள்ளியைத் தங்கம் பண்ணுகிறாய் என்று ஒரு அர்த்தம் ஏற்படுகிறது. வெள்ளியைத் தங்கம் பண்ணுவதற்கு ரஸவாதமென்று பெயர். அது துஷ்டர்களுடைய வேலை. நல்ல வழியிலிருந்து ஜீவிக்கிற உனக்கு இந்த விஷயம் எங்கிருந்து வந்தது என்று வேடிக்கையாய் அருளிச் செய்தார்.
No comments:
Post a Comment