Sunday, October 17, 2010


ஸ்லோகம் 55
शमदमगुणदान्तोदन्तवैदेशिकानां
शरणमशरणानां मादृशां माधवस्य
पदकमलमिदं ते पादुके रक्ष्यमासीत्
अनुदयनिधनानामकमानां निधानम्
சமதமகுணதாந்தோதந்தவைதேசிகாநாம்
சரணமசரணநாம் மாத்ருசாம் மாதவஸ்ய
பதகமலமிதம் தே பாதுகே ரக்ஷ்யமாஸீத்
அநுதயநிதநாநாமாகமாநாம் நிதாநம்.

ஏ பாதுகையே! கண் முதலிய வெளி இந்த்ரியங்களையும், மனஸ்ஸையும் கெட்டவழிகளில் செல்லாமல் எங்களால் அடக்க முடியவில்லை. எங்களுக்கு தயை, பக்தி இவைகளில்லை. இன்னும் வேறு நல்ல குணங்களுமில்லை. அந்த ப்ரஸ்தாபமிருக்குமூரில் கூட நாங்களில்லை. வேதங்களாலே சொல்லப்பட்ட பெருமாளுடைய திருவடி எங்களைக் காப்பாற்றுகிறது. அந்தத் திருவடியை நீ காப்பாற்றுகிறாய். அதாவது, அர்ச்சா ரூபமாய் பெருமாள் இல்லாது போனால் ஜனங்களுக்குக் கொஞ்சம் கூட ஸௌக்யமுண்டாகாது. ஆழ்வார் ஆச்சார்யர்களுக்காகத்தான் பெருமாள் கோவிலில் எழுந்தருளியிருக்கிறார். அந்தப்பெருமாள் உயிருள்ளவராக ஆயிரத்தில் ஒருவர் நினைப்பதுகூடக் கஷ்டம். லக்ஷத்திலொருவரென்றும் சொல்லலாம். நல்ல சர்க்கரைப் பொங்கல் பண்ணினால் வேறொருவருக்காகப் பண்ணுகிறான். "பெருமாள் அமுது செய்யப்பண்ணுகிறேன்" என்று சொல்லுகிறான். பெருமாள் அமுது செய்தாரா? இல்லையா? என்ற கவலை பெரும்பாலுமில்லை. அர்ச்சகர்கள், பரிஸாரகர்கள், தர்மகர்த்தாக்கள், வந்தவர்கள், இவர்களில் ஒருவராவது பெருமாளுடைய ஸுகத்தை நினைக்கவில்லை. யாரோ ஒரு மஹான் " இப்படி எல்லாரும் உம்முடைய ஸுகத்தை நினைக்கவில்லையே" என்று வருத்தப்படுகிறார். அவருக்காகத்தான் பெருமாள் அங்கு எழுந்தருளியிருக்கிறார்.

No comments:

Post a Comment