Sunday, June 28, 2009

1.ப்ரஸ்தாவ பத்ததி-ஸ்லோகம்-8
அச்ரத்தாநமபி நந்வதுநா ஸ்வகீயே
ஸ்தோத்ரே நியோஜயஸி மாம் மணிபாதுகே த்வம்
தேவ:ப்ரமாணமிஹ ரங்கபதிஸ் ததாத்வே
தஸ்யைவ தேவி பதபங்கஜயோர் யதா த்வம்.
ஏ பாதுகையே உன்னை ஸ்தோத்ரம் பண்ணவேண்டுமென்று எனக்கு ஆவலில்லை. நீ வலுவிலே பண்ணச்சொல்லுகிறாய். நீ பெருமாள் திருவடிக்கு எவ்விதமாயிருக்கிறாயோ அதை அந்த ரங்கநாதன் எனக்குச் சொல்ல வேண்டும். பாதுகையினுடைய குணம், போட்டுக்கொண்டவர்கள் சொன்னால்தானே பிறருக்குத்தெரியும். பிராட்டி பெருமாள் ஸ்ரீபாஷ்யகாரர் முதலானவர்களை ஸ்தோத்ரம் பண்ணினேன். அந்தமாதிரி ஆழ்வார் ஸ்தோத்ரம் என்று ஒன்றும் நான் பண்ணவில்லை. எனக்கும் இன்னும் எல்லோருக்கும் க்ஷேமத்திற்காக ஆழ்வார் பெருமாள் விஷயத்தில் இருக்கிற இருப்பை எனக்கு எவ்விதமாகச் சொல்லத்தெரியும். ஸ்ரீரங்கநாதன் தான் தோன்றப் பண்ணவேண்டும்.

ஸ்லோகம் 9
யதாதாரம் விச்வம் கதிரபி ச் யஸ்தஸ்ய பரமா
தமப்யேகா தத்ஸே திசஸி ச கதிம் தஸ்ய ருசிராம்
கதம் ஸா கம்ஸாரேர் த்ருஹிணஹரதுர்போதமஹிமா
கவீநாம் ஷூத்ராணாம் த்வமஸி மணிபாது ஸ்துதிபதம்.
பாதுகையே எல்லா லோகத்தையும் பெருமாள் தூக்குகிறார். அவரை நீயொருவளாயே தூக்குகின்றாய். எல்லா ஜீவர்களும் பெருமாளைத் தான் போய்சேரவேண்டும். அந்தப்பெருமாள் ஓரு இடத்துக்குப் போகவேண்டுமானால் உன்னைச் சாற்றிக்கொண்டு தான் போகவேண்டியிருக்கிறது. ப்ரமன், சிவன் முதலானவர்களாலுங்கூட உன்னுடைய பெருமையையறியமுடியாது.அப்படியிருக்க, என்னைப்போன்ற அற்பக்கவிகள் உன்னை எவ்விதமாய் ஸ்தோத்ரம் பண்ணமுடியும். ஆழ்வார் பரத்தில் தூங்குகிறவஸ்து ஆத்மா. தூக்கப்படுகிறது சரீரம். ஸகல லோகத்துக்கும் பெருமாள் ஆத்மா. அந்தப் பெருமாள் ஞானியான ஆழ்வார் ஆத்மா. ஆழ்வார் அநுக்ரஹத்தினால்தான் ஒருவனிடத்தில் பெருமாள் வருகிறார். ப்ரம்மா, சிவன் முதலானவர்கள் ஐச்வர்யத்தை ஆசைப்படுகிறார்கள். ஆழ்வாருக்குப் பெருமாளைத்தவிர வேறொரு பதார்த்தமும் வேண்டாம். அந்தஆழ்வாரை மூடனான நான் எப்படி ஸ்தோத்ரம் செய்வேன். பெருமாள் சொல்லிக் கொடுத்தால்கூட என்னால் முடியாது..

Friday, June 26, 2009



1.ப்ரஸ்தாவ பத்ததி-ஸ்லோகம் 6
தத்தே முகுந்தமணிபாதுகயோர் நிவேசாத்
வல்மீகஸம்பவகிரா ஸமதாம் மமோக்தி:
கங்காப்ரவாஹபதிதஸ்ய கியாநிவ ஸ்யாத்
ரத்யோதகஸ்ய யமுநாஸலிலாத் விசேஷ
:
கங்கையிலே மழைபெய்து வீதி ஜலமும் விழுகிறது, யமுனா ஜலமும் விழுகிறது. இரண்டையும் ஒரே மாதிரியாகவே கங்கா ஜலமெண்று கொண்டாடுகின்றார்கள். அதே மாதிரி நான் தாழ்ந்தவனாயிருந்தாலும், என் வார்த்தையானது பாதுகாஸ்தோத்ரமாயிருப்பதால் வால்மீகி செய்த ஸ்ரீமத் ராமாயணத்தைப்போல பெருமையடையும். அதாவது,எல்லாரும் த்ருஷ்டாதிருஷ்ட ஸகல புருஷார்த்தத்துக்காக ஸ்ரீமத் ராமாயணத்தைப் பாராயணம் பண்ணுகிறார்கள். அதுபோல இந்தக்ரந்தமும் பாராயணம் பண்ணினால் சகலமான நல்ல பலன்களையும் கொடுக்கும்.

ஸ்லோகம் -7
விஜ்ஞாபயாமி கிமபி ப்ரதிபந்நபீதி
:
ப்ராகேவ ரங்கபதிவிப்ரமபாதுகே த்வாம்
வ்யங்க்தும் க்ஷமாஸ் ஸதஸதீ விகதாப்யஸூய:
ஸந்த:ஸ்ப்ருசந்து ஸதயை:ஹ்ருதயை:ஸ்துதிம் தே

ஏ பாதுகையே! முன்னதாகவே விஜ்ஞாபனம் பண்ணுகிறேன். பயமாயிருக்கிறது. இது நல்லது இது பொல்லாதது என்று கண்டுபிடிக்கும்படியான ஸாமர்த்தியமுள்ளவர்களும் பொறாமையில்லாதவர்களுமான பெரியோர்கள் என்னிடத்தில் தயை பண்ணி நான் செய்கிற உன்னுடைய ஸ்தோத்ரத்தை கேட்கவேண்டும்.

Wednesday, June 24, 2009

ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம்-ப்ரஸ்தாவ பத்ததி


ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீநிவாஸ ராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே வேதாந்த ராமானுஜ மஹாதேசிகாய நம:

ப்ரஸ்தாவ பத்ததி

திவ்யஸ்தாநாத் த்வமிவ ஜகதீம் பாதுகே காஹமாநா
பாதந்யாஸம் ப்ரதமமநகா பாரதீ யத்ர சக்ரே;
யோகக்ஷேமம் ஸகல ஜகதாம் த்வய்யதீநம் ஸ ஜாநந்
வாசம் திவ்யாம் திசது வஸூதாச்ரோத்ர ஜன்மா முநிர் மே.4
ஓ பாதுகையே! ப்ரம்மலோகத்திலிருந்து ஸ்ரீரங்கநாதனை நீ திருவயோத்திக்கு எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வந்தாய். உன்னைப்போலவே ஸரஸ்வதி தேவியும் வரும்பொழுது முதலிலே வால்மீகிதான் உன்னைப்பற்றிக் கவனம் பண்ணினார். ஸ்ரீமத் ராமயணத்துக்கு ஆதிகாவ்யமென்று பெயர். எல்லா லோகங்களுடைய ஸகல க்ஷேமமும் உன் அதீநமென்று வால்மீகி மஹரிஷியானவர்,எனக்கு நல்வார்த்தையக் கொடுக்கவேண்டும்.


நீசேபி ஹந்த மம மூர்த்தநி நிர்விசேஷம்
துங்கேபி யந்நிவிசதே நிகமோத்தமாங்கே
ப்ராசேதஸப்ரப்ருதிபி:ப்ரதமோபகீதம்
ஸ்தோஷ்யாமி ரங்கபதிபாதுகயோர் யுகம் தத் 5
ஸ்ரீரங்கநாதனுடைய பாதுகைகள் மிகவும் உயர்ந்தன். நான் மிகவும் தாழ்ந்தவன். அவைகளை ஸ்ரீவால்மீகி முதலான அனேக பெரிய ருஷிகள் ஸ்தோத்ரம் பண்ணியிருக்கிறார்கள். அவைகளை நான் ஸ்தோத்திரம் பண்ணினாலும் அப்பாதுகைகளுக்கு மனதில் வருத்தமுண்டாகாது, ஸந்தோஷமாயிருக்கும். ஏனென்றால், இந்தப்பாதுகைகள் வேதத்தின் தலையிலே, அதாவது உபநிஷத்தில் இருக்கின்றன. அதாவது உபநிஷத்துகள் பாதுகைகளைப்பற்றி சொல்லுகின்றன். மிகவும் தாழ்ந்த என்தலையிலுமிருக்கின்றன.அதாவது
ஸ்ரீபாதுகையை உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்கிற வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் சாதிக்கிறார்கள். அதில் பாதுகைகளுக்கு வருத்தமில்லை. எல்லோருக்கும் செளக்யமுண்டாகிறதென்று ஸந்தோஷமே. ஆதலால் நானும் ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்.









Tuesday, June 23, 2009

1 ப்ரஸ்தாவ பத்ததி-ஸ்லோகம் 3


வர்ணஸ்தோமைர் வகுள ஸுமநோ வாஸனா முத்வஹந்தீம்ஆம்நாயான் ப்ரக்ருதிமபராம் ஸம்ஹிதாம் த்ருஷ்டவந்தம்;
பாதே நித்யப்ரணிஹிததியம் பாதுகே ரங்கபர்த்து:த்வம்நாமனம் முநிமிஹ பஜே த்வாமஹம் ஸ்தோதுகாம:


திருவாய்மொழி என்பது தமிழ்வேதம்.எப்பொழுதும் ஸ்ரீரங்கநாதனுடைய திருவடியையே நினைத்துக்கொண்டிருந்த நம்மாழ்வார் அந்த வேதத்தைக் கண்டுபிடித்தார்.ஸ்ரீரங்கநாதன் பாதுகையென்று சொல்லப்பப்டுகிற அவரை இந்த ஸ்தோத்டம் விக்னமில்லாமல் முடிவதற்காக முதலில் த்யானிக்கிறேன்.

Monday, June 22, 2009


ப்ரஸ்தாவ பத்ததி

ஸ்லோகம் 2

பரதாய பரம் நமோஸ்து தஸ்மை

ப்ரதமோதாஹரணாய பக்திபாஜாம்

யதுபஜ்ஞமசேஷத: ப்ருதிவ்யாம்

ப்ரதிதோ ராகவபாதுகாப்ரபவ:


ஸ்ரீபரதாழ்வானால்தான் ஸ்ரீராமானுடைய பாதுகைகளுக்கு இவ்வளவு சக்தியிருக்கிறதென்பது எல்லாவுலகத்திற்கும் தெரிந்தது. ஆகையால் ஸ்ரீபரதாழ்வாரைத்தான் ஸேவிக்கிறேன்.ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் முதல் அங்கத்தில் இருபத்தைந்தாவது ஸ்லோகத்தில் அருளிச்செய்தபடி “பரத” என்பது நாதமுனிகளைச் சொல்லுகிறது. அதனால், ஸ்ரீநம்மாழ்வாருடைய பெருமை ஸ்ரீநாதமுனிகளால்தான் உலகத்திற்கு தெரிந்தது "பரத” என்பதால் தெரியப்படுத்தபட்டதில் பாவ, ராக, தாள் என்கிற மூன்று ஸங்கதிகளிலேயும் மஹாபண்டிதராகிய நாதமுனிகளை ஸேவிக்கிறேன்

Sunday, June 21, 2009

1.ப்ரஸ்தாவ பத்ததி




ஸ்ரீ:


ஸந்த:ஸ்ரீரங்கப்ருத்வீச சரணத்ராணசேகரா:


ஜயந்தி புவனத்ராண பதபங்கஜரேணவ: .1.




ஸ்ரீரங்கநாதன் பாதுகைகளை பரமஸந்தோஷத்துடன் சிரஸில் வைத்துக்கொள்ளுகிற பெரியோர்களுடைய திருவடிதூள்கள் எல்லா லோகத்தையும் காப்பாற்றுகிறது. அப்பேர்ப்பட்ட பெரியோர்கள் மிகவும் உயர்ந்தவர்களாயிருக்கிறார்கள்.(உட்கருத்து) நம்மாழ்வாரைக் கொண்டாடுகிறவர்கள் தாங்களும் நல்லகதியடைந்து எல்லாருக்கும் ஸகலபுருஷார்த்தங்களையும் கொடுப்பார்கள் என்பது.

Friday, June 19, 2009

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-நம்மாண்டவன் வ்யாக்யானம்



ஸ்ரீவைஷ்ணவத் திரளுக்கு அடியேனின் ப்ரணாமங்கள்.

ஜகதாசார்யாரான தூப்புல் நிகமாந்த தேசிகன் அருளிசெய்துள்ள க்ரந்தங்கள் அனேகம்.
அவற்றுள் நித்ய பாராயணமாக பெரியோர்களால் கொள்ளப்பட்டவை அனேகம்.ஸ்ரீமதாண்டவன் சம்ப்ரதாயத்தில சமாச்ரயணக் காலத்தில் உபதேசிக்கபடும் க்ரந்தம் ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரமாகும். வகுளாபரணபெருமாளான நம்மாழ்வாரின் பெருமையை பேசும் க்ரந்தமாக பூர்வாச்சார்யர் அருளிச் செய்வர். ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்துக்கு மிகவும் எளிமையான வ்யாக்யனத்தை ஸ்ரீமத் நம்மாண்டவன் என்று கொண்டாடப்பட்ட ஸ்ரீமத் தேரழந்தூராண்டவன் வேதாந்த் ராமானுஜ மஹாதேசிகன் அருளிசெய்துள்ளார். அவ்யாக்யானத்தை சேவிக்கும்போது உருகாதார் மனம் கல்லே. அவற்றை ஆண்டவன் யாஹு குழுவில் வெளியிட்டால் வலைத்தளத்தில் பார்வையிட பலரால் முடியும் என நினைத்து இம்முயற்சியை தொடங்குகிறேன்.

தாஸன்,
சித்ரகூடம் ரங்கநாதன்.