1.ப்ரஸ்தாவ பத்ததி-ஸ்லோகம்-8
அச்ரத்தாநமபி நந்வதுநா ஸ்வகீயே
ஸ்தோத்ரே நியோஜயஸி மாம் மணிபாதுகே த்வம்
தேவ:ப்ரமாணமிஹ ரங்கபதிஸ் ததாத்வே
தஸ்யைவ தேவி பதபங்கஜயோர் யதா த்வம்.
ஏ பாதுகையே உன்னை ஸ்தோத்ரம் பண்ணவேண்டுமென்று எனக்கு ஆவலில்லை. நீ வலுவிலே பண்ணச்சொல்லுகிறாய். நீ பெருமாள் திருவடிக்கு எவ்விதமாயிருக்கிறாயோ அதை அந்த ரங்கநாதன் எனக்குச் சொல்ல வேண்டும். பாதுகையினுடைய குணம், போட்டுக்கொண்டவர்கள் சொன்னால்தானே பிறருக்குத்தெரியும். பிராட்டி பெருமாள் ஸ்ரீபாஷ்யகாரர் முதலானவர்களை ஸ்தோத்ரம் பண்ணினேன். அந்தமாதிரி ஆழ்வார் ஸ்தோத்ரம் என்று ஒன்றும் நான் பண்ணவில்லை. எனக்கும் இன்னும் எல்லோருக்கும் க்ஷேமத்திற்காக ஆழ்வார் பெருமாள் விஷயத்தில் இருக்கிற இருப்பை எனக்கு எவ்விதமாகச் சொல்லத்தெரியும். ஸ்ரீரங்கநாதன் தான் தோன்றப் பண்ணவேண்டும்.
ஸ்லோகம் 9
யதாதாரம் விச்வம் கதிரபி ச் யஸ்தஸ்ய பரமா
தமப்யேகா தத்ஸே திசஸி ச கதிம் தஸ்ய ருசிராம்
கதம் ஸா கம்ஸாரேர் த்ருஹிணஹரதுர்போதமஹிமா
கவீநாம் ஷூத்ராணாம் த்வமஸி மணிபாது ஸ்துதிபதம்.
பாதுகையே எல்லா லோகத்தையும் பெருமாள் தூக்குகிறார். அவரை நீயொருவளாயே தூக்குகின்றாய். எல்லா ஜீவர்களும் பெருமாளைத் தான் போய்சேரவேண்டும். அந்தப்பெருமாள் ஓரு இடத்துக்குப் போகவேண்டுமானால் உன்னைச் சாற்றிக்கொண்டு தான் போகவேண்டியிருக்கிறது. ப்ரமன், சிவன் முதலானவர்களாலுங்கூட உன்னுடைய பெருமையையறியமுடியாது.அப்படியிருக்க, என்னைப்போன்ற அற்பக்கவிகள் உன்னை எவ்விதமாய் ஸ்தோத்ரம் பண்ணமுடியும். ஆழ்வார் பரத்தில் தூங்குகிறவஸ்து ஆத்மா. தூக்கப்படுகிறது சரீரம். ஸகல லோகத்துக்கும் பெருமாள் ஆத்மா. அந்தப் பெருமாள் ஞானியான ஆழ்வார் ஆத்மா. ஆழ்வார் அநுக்ரஹத்தினால்தான் ஒருவனிடத்தில் பெருமாள் வருகிறார். ப்ரம்மா, சிவன் முதலானவர்கள் ஐச்வர்யத்தை ஆசைப்படுகிறார்கள். ஆழ்வாருக்குப் பெருமாளைத்தவிர வேறொரு பதார்த்தமும் வேண்டாம். அந்தஆழ்வாரை மூடனான நான் எப்படி ஸ்தோத்ரம் செய்வேன். பெருமாள் சொல்லிக் கொடுத்தால்கூட என்னால் முடியாது..
No comments:
Post a Comment