ஸ்லோகம் 13
ஸ்லோகம் 13
நிஸ்ஸந்தேஹநிஜாபகர்ஷவிஷயோத்கர்ஷோபி ஹர்ஷோதய
ப்ரத்யூடக்ரமபக்திவைபவபவத்வையாத்யவாசாலித :
ரங்காதீச பத்த்ரவர்ண நக்ருதாரம்பைர் நிகும்பைர் கிராம்
நர்மாஸ்வாதிஷு வேங்கடேச்வர கவிர் நாஸீரமாஸிததி
ஏ பாதுகையே! நான் மிகவும் தாழ்ந்தவன் என்றும்,பாதுகைகள் அதிக உயர்ந்தவைகள் என்றும் தீர்மானமாய் தெரிந்திருக்கிறது. ஆனாலும் பாதுகைகளிடத்தில் மிகவும் அதிகமான பக்தியுண்டாக அதனால் தலை தெரியாத ஸந்தோஷமுண்டாகி ஒரு தைரியமுண்டாகியிருக்கிறது. அதனால் தாறுமாறாய் பிதற்றிக்கொண்டு விளையாடுகிறவர்களுக்குள்ளே முதலாக இருக்கிறேன்.
No comments:
Post a Comment