ப்ரஸ்தாவ பத்ததி ஸ்லோகம்-10
ச்ருதப்ரஜ்ஞஸம்பந்மஹிதமஹிமாந: கதிகதி
ஸ்துவந்தி த்வாம் ஸந்த: ச்ருதிகுஹரகண்டூஹரகிர:
அஹம் த்வல்பஸ் தத்வத் யதிஹ பஹு ஜல்பாமி ததபி
த்வதாயத்தம் ரங்கக்ஷிதிரமணபாதாவநி விது:
ஏ பாதுகையே! சாஸ்திரங்களையறிந்து இயற்கையாகவே புத்திசாலிகளாயும் கேட்கிறவர்களுக்கு ,இகவும் இன்பமாகப் பேசக்கூடியவர்களாயுமிருக்கிற எவ்வளவோ பெரியோர்கள் உன்னை ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள். ஒன்றும் தெரியாத நான் அவர்களைப்போலவே தாறுமாறாகவே பிதற்றுகிறேன். அப்படிபிதற்றுகிறதும் உன் அதீனம் தானென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.
No comments:
Post a Comment