Wednesday, August 26, 2009

ய: ஸப்தபர்வவ்யவதாநதுங்காம்
சேஷத்வகாஷ்டாமபஜந் முராரே:
தஸ்யாபி நாமோதவஹநாத் த்வயாஸெள
லகூக்ருதோபூத் சடகோப ஸூரி:

स्लोकम 26
य: सप्तपर्वव्यवधानतुङ्काम् सॆषत्वकाष्टामबजन् मुरारॆ:
तस्यापि नामॊद्वहनात् त्वयासौ लघूक्रुतॊभूत् सठकॊपशूरि:

ஏ பாதுகையே ! நம்மாழ்வார் பெருமாளுடைய பக்தர்கள் வரிசையில் நான் எட்டாவதாயிருக்கிறேன் என்று ஸாதித்தார். அவ்விஷயத்தில் அவரை ஜயிப்பதற்காகவே அவர் பெயரை நீ வஹித்துக்கொண்டு ஒன்பதாவதாய் ஆகிவிட்டாய். ஒருவரின் பெயரை ஒருவர் வைத்துக்கொள்வது அவருக்குத்தாஸன் என்பதைக் காண்பிக்கும் என்பது சாஸ்த்திர ஸித்தம்.
ए पादुकैये नम्माळ्वार पेरुमाळुडैय भक्तर्गळ वरिसयिल नान एठ्ठावतायिरुक्किरेन एन्ऱु सातित्तार्. अव्विषयत्तिल अवरै जयिप्पतर्काकवे अवर पेयरै नी वहित्तुक्कोण्डु ओन्ब्तावताय आगिविठ्ठाय्. ओरुवर पेयरै ओरुवर वैत्तुकोळ्वतु अवरुक्कुत दासन एन्बदैक काण्बिक्कुम एन्बतु सास्त्रसित्तम्.

स्लोकम 25
आकर्ण्य कर्णाम्रुतमात्मवन्तो गाथासहस्रम शठकोपसूरे:
मञ्जुप्रणादाँ मणिपादुके त्वाम तदेकनामानमनुस्मरन्ति

ஆகர்ண்ய கர்ணாம்ருதமாத்மவந்த: காதாஸஹஸ்ரம் சடகோபஸூரே:
மஞ்ஜூப்ரணாதாம் மணிபாதுகேத்வாம் ததேகநாமநமநுஸ்மரந்தி

பெரியோர்களுக்கு நம்மாழ்வாருடைய பாசுரம் மிக இன்பமாயிருக்கிறது.அதே மாதிரியாகவே உன்னுடைய சப்தமிருக்கிறது. உலகத்தில் ஒருவர் மாதிரி ஒருவர் பேசினால் அவர் வரும்பொழுது அவரே வந்துவிட்டார் என்று சொல்வது வழக்கம். அதனால் நம்மாழ்வாருடைய பெயரை உனக்கு வைத்துவிட்டார்கள்.

पेरियोर्गळुक्कु नम्माळ् वारुडैय पासुरम् मिग इन्बमायिरुक्किरतु.अते मातिरियाकवे उन्नुडैय सब्तमिरुक्किरतु. उलकत्तिल् ओरुवर् मातिरि ओरुवर् पेसिनाल् अवर् वरुम्पोऴुतु अवरे वन्दुविठ्ठार् एन्रु सोल्वतु वळक्कम्. अतनाल् नम्माळ्वारुडैय पेयरै उनक्कु वैत्तुविठ्ठार्गळ्.

Friday, August 21, 2009

स्लोकम 23
நியதம் மணிபாதுகே ததான: ஸ முனிஸ்தே ஸடகோப இத்யபிக்யாம்
த்வது பாச்ரிதபாதஜாதவம்ஸ ப்ரதிபத்த்யை பரமாததாந ரூபம்
नियतं मणिपादुके दधान: स मुनिस्ते शठकोप इत्यभिक्याम्
त्वतुपाश्रितपातजातवंश प्रतिपत्त्यै परमाततान रूपम्
ஏ பாதுகையே! நம்மாழ்வார் உன்னிடத்தில் பக்தியினால் உனது “சடகோபன்”என்ற பெயரை வஹித்து, சூத்ர வம்சத்தைக் கொண்டாடுவதற்காகவே அந்த வம்சத்தில் அவதரித்தார்.
ए पादुकैये नम्माळ्वार उन्निडत्तिल भक्तियिनाल उनतु “शठकोपन्” एन्ऱ पेयरै वहित्तु सुत्त्तिर वम्सत्तैक कोण्डादुवतर्काकवे अन्त वम्स्सतिल अवतरित्तार्.
ஸ்லோகம் 24
मुनिना मणिपादुके त्वया च प्रथिताभ्यां शठकोपसंञ्यैव
द्वितयं सकलोपजिव्यमासीत् प्र्थमेन श्र्रुतिरन्यतस्तदर्त
:
முநிநா மணிபாதுகே த்வயா ச
ப்ரதிதாப்யாம் சடகோபசம்ஜ்ஞயைவ
த்விதயம் ஸகலோபஜீவ்யமாஸீத்
ப்ரதமேன ச்ருதிரந்யதஸ்ததர்த்த:

ஏ பாதுகையே நீயும் நம்மாழ்வாரும் ஒரு விதமான காரியஞ்செய்தீர்கள் . அதனால் உங்களிருவர்களுக்கும் "சடகோபன்" என்று ஒரே பெயர். நம்மாழ்வார் வேதத்தைத் தமிழாகச் செய்து எல்லோரும் சொல்லும்படியாகப்பண்ணினார். நீ வேதத்தினுடைய அர்த்தமான பெருமாளைச் சண்டாளன் கூட ஸேவிக்கும்படியாக வீதியிலே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வந்தாய்.


ऎ पादुगैयॆ नीयुम् नम्माऴ्वारुम् ओरु वितमान कारियञ्सेय्तीर्गळ् . अतनाल् उङ्कळिरुवर्कळुक्कुम् "सठकॊपन्" एनृ ओरॆ पेयर्. नम्माऴ्वार् वॆदत्तैत्
तमिळाकच् चेय्तु एल्लॊरुम् सोल्लुम्बडियागप्पण्णिनार्. नी वॆतत्तिनुडैय अर्थ्थमान् पेरुमाळैच् सण्डाळन् कूड शॆविक्कुम् पडियाक वीदियिलॆ एऴुन्थरुळप्पण्णिक्कोण्डु वन्दाय्.

Thursday, August 20, 2009

स्लोकँ 22

द्रमिडॊपनिषन्निवेशशून्यान्
अपि लक्षमिरमाणाय रोचयिष्यन्
ध्रुवमाविशति स्म पादुकात्मा
शठकोप: स्वयमेव माननीय:

த்ரமிடோபநிஷந் நிவேசசூந்யாந்
அபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யந்
த்ருவமாவிசதி ஸ்ம பாதுகாத்மா
சடகோப: ஸ்வயமேவ மாநநீய:


எல்லோரும் பெருமாளையடையவேண்டுமென்று
எண்ணங்கொண்டு நம்மாழ்வார் திருவாய்மொழி செய்தருளினார்.
அந்தத்திருவாய்மொழியையும் சிலர் நெட்டுருபண்ணுகிறதில்லை.
அவர்களும் பெருமாளையடைவதற்காக ஆழ்வார் பாதுகையாக அவதரித்தார். அதாவது எல்லோரும் பெருமாளையடைவதற்காக
ஸந்நிதிகளில் பாதுகையை எல்லோருக்கும் ஸாதிக்கிறார்கள்.
அதனால் பாதுகைக்கு சடகோபனென்று பெயர்

एल्लोरुम पेरुमाळैयडैयवेडुमेन्रु एण्णङकोण्डु नम्माळ्वार तिरुवाय्मोळि सेय्तरुळिनार्. अन्दत्तिरुवाय्मोळियैयुम सिलर नेठ्ठ्रु पण्णुकिरतिल्लै. अवर्गळुम पेरुमाळैयडैवतरक्काक आळ्वार पादुकैयाक अवदरित्तार्. अथावतु एल्लॊरुम पेरुमाळैयडैवतर्काक सन्निथिगळिल पादुकैयै एल्लॊरुक्कुम साथिक्किरार्गळ्. अतनाल् पातुकैक्कु शठकोपनेन्रु पेयर्

Saturday, August 15, 2009

समाख्यापद्धति:द्वितीया
சமாக்யா பத்ததி
समाखयाप्द्धति: द्वितिया சமாக்யாபத்ததி
वनदे विष्णु पदासक्तं तम्रुषिं ताञ्च पादुकाम्
यथार्थ शठजितसंञा मच्चित्त विजयाद्ययो:
வந்தே விஷ்ணு பதாஸக்தம் தம்ருஷிம் தாம்ச பாதுகாம்
யதார்த்தா சடஜித்ஸம்ஜ்ஞா மச்சித்த விஜயாத்யயோ:
பாதுகைக்கு“சடாரி” என்று திருநாமம் வந்ததற்கு காரணம்
ஸாதிக்கிறார்.சடஜித் என்றால் துஷ்டனை ஸ்வாதீனம் பண்ணிக்கொண்டவனென்று அர்த்தம். மிகவும் துஷ்டனான என்னை பாதுகையும் ஆழ்வாரும் கெட்ட வழிகளில் செல்லாமல் நல்ல வழிகளில் செல்லும்படி செய்த படியால் அவ்விருவருக்கும் அப்பெயர் வந்தது. நம்மாழ்வாருக்கு சடகோபனென்று திருநாமம். அந்தத் திருநாமம் பாதுகைக்கு எப்படி வந்ததென்பதற்கு காரணம் ஸாதித்தார்.சடனென்ற அஸுரனைப் பாதுகை ஜயித்தபடியால் பாதுகைக்கு “சடகோப”னென்ற திருநாமம் வந்தது. இவ்விஷயம் ஸ்ரீபாஞ்சராத்ர ஸம்ஹிதையில் சொல்லப் பட்டிருக்கிறதென்று சொல்லுகிறார்கள்.

पादुकैक्कु “शठारि” एन्ऱु तिरुनामँ वन्ददर्कु कारणम सातिक्किरार्. शठजित एन्राल तुषठनै स्वादिनम पण्णिक्कोणडवनेन्रु अर्तम्. मिगवुम तुषठनान एन्नैप पादुकैयुम आऴ्वारुम केठ्ठ वऴिकळिल सेल्लामल नल्ल वळिकळिल सेल्लुम्बडि सेयत पडियाल अव्विरुवरुक्कुम अप्पेयर वन्ततु. नम्माळवारुक्कु शठकोपनेन्ऱु तिरुनामम्.इव्विषयम श्रीपाञ रात्र शँहितैयिल् सोल्लप्पठ्ठतेन्रु सोल्लुकिरार्गळ्.

Saturday, August 8, 2009

ஸ்லோகம் 20
த்வயி விஹிதா ஸ்துதிரேக்ஷா பதரக்ஷிணி பவதி ரங்கநாதபதே
ததுபரி க்ருதா ஸபர்யா நமதாமிவ நாகிநாம் சிரஸி

श्लॊकम् २०
त्वयि विहिता स्तुतिरॆषा पदरक्षिणि भवति रङ्गनाथपदॆ
तदुपरि कृता शपर्या नमतामिव नाकिनाम् शिरसि
ஏ பாதுகையே ! முன் ஒரு சமயத்தில் அர்ஜூனன் ஸ்ரீக்ருஷ்ணன் திருவடியில் சிவனுக்குப் பண்ணவேண்டிய பூஜையைச் செய்தானாம். அது மறுநாள் தன்னுடைய பூஜைப் பெட்டியிலிருக்கிற சிவன் தலையிலிருந்ததாம். அதைப்பார்த்து அதிகமாய் ஆச்சர்யப்பட்டானாம். பெருமாள் திருவடியிலே பூஜை செய்தபடியால் திருவடிக்கும் ஆயிற்று, சிவன் முடிக்கும் ஆயிற்று. அந்தமாதிரி உன்னை நான் ஸ்தோத்ரம் பண்ணினால், உனக்கும் ஆகிறது., திருவடிக்கும் ஆகிறது. ஆசார்யர்களை ஸ்துதித்தால் பெருமாளுடைய திருவுள்ளமுகக்கும். திருவடியைப்பற்றி ஸ்தோத்ரம் பண்ணுகிறவருக்கு ஒரு ஆயிரம் தானாகும். எனக்கோ இரண்டாயிரமாகிறது.

ए पादुकैये मुन ओरु समयत्तिल् अरजुनन श्री क्रुश्णन तिरुवडियिल सिवनुक्कुप पण्णवेण्डिय पुजैयै चेयतानाम्. अतु मरुनाळ तन्नुडैय पूजैप पेट्टियिलिरुक्किर सिवन तलैयिलिरुन्तताम्. अतैप्पार्तु अदिकमाय आच्चर्यप्पट्टानाम्. पेरुमाळ तिरुवडियिले पुजै सेयतपडियाल तिरुवडिक्कुम आयिर्रू. सिवन मुडिक्कुम आयिऱ्ऱु. अन्द मातिरि उन्नै नान स्तोत्रम पण्णिनाल उनक्कुम अगिरतु, तिरुवडिक्कुम आगिरतु.आचार्यरकळै स्तुतित्ताल पेरुमाळुडैय तिरुवुळ्ळमुकक्कुम्.
तिरुवडियैप्पर्रि सतोत्रम पण्णुकिरवरुक्कु ओरु आयिरम तानाकुम्. एनक्को इरण्डायिरमागिरतु.

Friday, August 7, 2009


ஸ்லோகம் 19
அநுக்ருதநிஜநாதாம் ஸூக்திமாபாதயந்தீ
மநஸி வசஸி ச த்வம் ஸாவதாந மம ஸ்யா:
நிசமயதி யதாஸௌநித்ரயா தூர முக்த:
பரிஷதி ஸஹ லக்ஷ்ம்யா பாதுகே ரங்க நாத:

अनुकृतनिजनादां सूक्तिमापादयन्ति
मनसि वचसि च् त्वं सावधाना मम स्या:
निशयमति यथासौ निद्रया दूरमुक्त:
परिषति सह लक्ष्मया पादुके रङ्गनाथ:



ஏ பாதுகையே இராத்ரியில் இந்தக்ரந்தத்தைப் பண்ணும்படி நியமித்தாய். உன்னுடைய சப்தம் போல (ஆழ்வாருடைய ஸூக்திபோல) பெருமாளுக்கு மிகவும் இன்பமான வார்த்தைகள் தாமதமில்லாமல் மனதில் தோன்றி அதிவேகமாய் வாக்கில் வரும்படியாக நீ தயை செய்யவேண்டும். இதின் ஸ்வாராஸ்யத்தாலே தாயாருக்கும் பெருமாளுக்கும் தூக்கம் மறந்து போய் ஸபையிலே கேட்டுக்கொண்டிருக்கவேண்டும்

ऎ फातुकैयॆ इरात्रियिल् इन्तक्रन्त्त्तैप् पण्णुम्बडि नियमित्ताय्. उन्नुडैय सब्थम् पॊल (आऴ्वारुडैय शूक्तिपॊल) पेरुमाळुक्कु मिगवुम् इन्बमान वार्त्तैगळ् दमतमिल्लामल् मनथिल् थॊनि अथिवॆकमाय् वाक्किल् वरुम्बटियाग नी दयै
चेय्यवॆण्डुम्. इथिन् स्वरास्यत्ताले पेरुमालुक्कुम् तायारुक्कुम् तूक्कम् मरन्तु पॊय सभैयिले केट्टुकोणडिरुक्कवेण्दुम्


Monday, August 3, 2009

ஸ்லோகம் 18
அபார கருணாம்புதே: தவகலு ப்ரஸாதாதஹம்
விதாதுமபி சக்னுயாம் சதஸஹஸ்ரிகாம் ஸம்ஹிதாம்
ததாபி ஹரிபாதுகே தவ குணெள கலேசஸ்திதே:
உதாஹ்ருதிரியம் பவேதிதி மிதாபி யுக்தா ஸ்துதி

अपार करुणाम्बुधेस्तव कलु प्रसादादहम
विधातुमपि शक्नुयाम् शतसहस्रिकां संहिताम्
तथापि हरिपादुके तव गुणौघलेशस्थिते:
उदाह्रुतिरियम् भवेदिति मितापि युक्ता स्तुति
:

ஏ பாதுகையே! ஒரு ஸ்வாமி முகமாய் ஆயிரம் ஸ்லோகம் பண்ணும்படி நியமித்தாய். கருணைக் கடலான உன்னுடைய தயையினாலே லக்ஷம் ஸ்லோகமும் பண்ணலாம். லக்ஷம் பண்ணினாலும் உன்னுடைய குணங்கள் சொல்லிற்றாகுமா? ஆகையினால் கொஞ்சமாகாத்தான் இருக்கட்டுமே என்று நியமித்தாய் போலும்.

ए पादुकैये ओरु स्वामि मुकमाय् आयिरं स्लोकम् पण्णुम्बडि
नियमित्ताय्. करुणैक्क्डालान उन्नुडैय दयैयिनाले लक्शं
स्लोकमुम् पण्णलाम. लकशं पण्णिनालुम् उन्नुडैय
गुणङ्गळ् मुशुमैयुम् सोल्लिरराकुमा?
आगैयिनाल् कोन्जमाकत्तान् इरुक्कट्टुमे
एन्रु नियमित्ताय् पोलुम्