Friday, December 18, 2009

பக்திப்ரஹ்வபுரப்ரபஞ்ஜனஜடாவாடீஸநீடஸ்புர-

சூடாரக்வதவாஸனாபரிமளஸ்தயாநே ஸ்தும: பாதுகே

ரங்கக்ஷோணிப்ருதங்க்ரிபத்மயுகளீபூர்ணப்ரபத்தே பலம்

நிச்சிந்வந்தி விபச்சித:சமதநா: நித்யம் யதுத்தம்ஸனம் 38

 

பெருமாள் பாதுகைகளை சிவன் எப்பொழுதும்  தன் தலையில் வைத்துக்கொண்டிருக்கிறார்.  அதனால் சிவன் தலையிலுள்ள கொன்னைப்பூவின் வாஸனையுடனிருக்கிறது பாதுகை.  பெரியோர்கள், ஸ்ரீரங்கநாதனுடைய திருவடிகளில் சரணாகதி செய்வது எப்போதும் பாதுகையை சிரஸில் வைத்துக்கொள்வதற்காகத்தான் என்று சொல்லுகிறார்கள்.  அப்படிப்பட்ட பெருமை பொருந்திய பாதுகைகளை ஸ்தோத்திரம் பண்ணுகிறோம்.

पेरुमाळ् पादुकैकळै शिवन एप्पोज़ुतुम् तन् तलैयिल् वैत्तुक्कोण्डिरुक्किरार्. अथनाल् सिवन् तलैयिलुळ्ळ कोन्नैपुविन् वासनैयुडनिरुक्किरतु पादुकै. पेरियोर्कळ् श्रीरङ्गनाथनुडैय तिरुवडिकळिल् शरणागति शेयवतु, एप्पोतुम् पादुकैयै शिरसिल् वैत्तुक्कोळ्वतर्काकत्तान् एन्रु सोल्लुकिरार्गळ्. अप्पडिप् पठ्ठ पेरुमै पोरुन्धिय पादुकैकळै स्थोरम् पण्णुकिरॊम्

 

मातर्माधवपादुके तव गुणान् क; स्तोतुमस्तोकधी:

कोटीरेषु यदर्पणप्रणयिनां सेवाक्षणे स्वर्गिणाम्

अन्योन्यं क्षिपतामहंप्रथमिकासम्मर्दकोलाहलं

विष्वक्सेनविहारवेत्रलतिकाकम्पश्चिराल्लुम्पति 39

மாதர்மாதவபாதுகே தவ குணான் க; ஸ்தோதுமஸ்தோகதீ:

கோடீரேஷுயதர்பணப்ரணயினாம் ஸேவாக்ஷணே ஸ்வர்க்கிணாம்

அந்யோந்யம் க்ஷிபதாமஹம்ப்ரதமிகாஸம்மர்த்தகோலாஹலம்

விஷ்வக்சேநவிஹாரவேத்ரலதிகாகம்பச்சிரால்லும்பதி

 

லோகமாதாவான பாதுகையே! தேவதைகள் பெருமாளை ஸேவிக்க வருகிறபொழுது, தங்கள் தலையில் பாதுகையை ஸாதித்துக் கொள்வதற்காக ஒருவருக்கொருவர் மேல் விழுந்து எனக்குத்தான் முன்பு என்று நெருக்கிக் கொண்டு பெரியசப்தம் போடுகிறார்கள்.விஷ்வக்ஸேநர், தன் கையில் விளையாட்டுக்காக வைத்துக்கொண்டிருக்கிற பிரம்பால் அடித்த அந்த சப்தத்தை வெகு சிரமப்பட்டு  அடக்குகிறாரோ அப்படிப்பட்ட உனது பெருமையையறிந்து சொல்வதற்கு  எவருக்குத்தான் புத்தியிருக்கிறது. ப்ரும்ம ருத்ராதி தேவதைகளும் சபலத்துக்குட்பட்டிருக்கிறார்களேயொழிய ஆசையில்லாதவர்கள் ஒருவருமில்லை. அந்த தேவதைகள் நம்மாழ்வார் மாதிரி நமக்கு வரவில்லையேயென்று வியஸனப்படுகிறார்கள்

 

लॊकमातावान पादुकैयॆ दॆवदैकळ् पेरुमाळै शॆविक्क वरुकिरपोऴुतु, तङ्कळ् तलैयिल् पादुकैयै शातितुक् कोळ्वतर्काक ओरुवरुक्कोरुवर् मॆल् विऴुन्दु एनक्कुततान् मुन्बु एनृ नेरुक्किक् गोण्डु पेरियसब्तम् पॊडुकिरार्गळ्.विश्वक्शॆनर्, तन् कैयिल् विळैयाट्टुक्काक वैत्तुक्कोण्टिरुक्किर पिरम्बाल् अटित्थ अन्द सबत्तै वेगु सिरमप्पट्टु अटक्कुगिरारॊ अप्पटिप्पट्ट उनतु पेरुमैयैयरिन्दु सोल्वतर्क्कु  एवरुक्कुत्तान् बुद्धियिरुक्किरतु. भ्रुह्मरुद्रादि दॆवतैकळुम् सबलत्तुक्कुट्पड्डिरुक्किरार्गळॆयोऴिय आसैयिल्लातवर्गळ् ओरुवरुमिल्लै. अन्त दॆवतैकळ् नम्माऴ्वार् मातिरि नमक्कु वरविल्लैयॆयेनृ वियशनप्पडुकिरार्गळ्. 39

 

யோஷித்பூதத்ருஷந்த்போடசகடஸ்தேமாநி வைமாநிக

ஸ்ரோதஸ்விந்யுபலம்பநாநி பஸிதோதஞ்சத்பரீக்ஷிந்தி ச

துரத்யாதிஷ்வபி துர்வசநாநி பதயோ: க்ருத்யாநி மத்வவே யத்

தத்தே தத் ப்ரணயம் ததேவ சரணத்ராணம் வ்ருணே ரங்கிண:

 

यॊषिद्भुअतद्रुषन्तयपॊढशकटस्थॆमानि वैमानिक

स्रॊतस्विन्युपलम्भनानि भसितॊद्ञ्च्त्परीक्षिन्ति च

दूत्यादिष्वपि दुर्वचानि पदय़ो:क्रुत्यानि मत्वॆव यत्

धत्तॆ तत्प्रणयं तदॆव चरणत्राणं व्रुणॆ रङ्गिण:

 

லகத்தில் ஒரு மனிதனுக்கு “கால்” என்ற அவயவமானது மிகத் தாழ்ந்தது என்று சொல்லுகிறார்கள். அந்தக்காலில் இந்தப்பாதுகையிருக்கிறது. இதற்கு இவ்வளவு பெருமையுண்டென்று சொல்லலாமாவென்றால், சொல்லுகிறார். பெருமாளின் திருமேனிக்குள் திருவடி மிகவும் உயர்ந்தது.  ஆகையால்தான் பாதுகை அத்தோடு ஸ்நேஹம் பண்ணினது.  எப்படியென்றால், பெருமாள் திருவடி ஒரு கல்லை அகலியை என்ற பெண்ணாகச் செய்தது, சகடாஸுரனைக்கொன்றது.திரிவிக்ரமாவதாரத்தில் கங்கையையுண்டாக்கிற்று.  சாம்பலில் பரீஷித்து என்று மஹாராஜாவை உண்டாக்கினது. இதெல்லாம் பரத்வத்தை(உயர்ந்த தன்மையை) தெரிவிக்கிறது. தர்மபுத்ரருக்கு தூது சென்றது. இது ஸெளலப்ய கார்யம்.  ஆகையால் திருவடிக்கு பெரிய மேன்மை யிருக்கிறதென்று எண்ணினது போல் ஸர்வகாலமும் அத்திருவடியை விட்டுப் பிரியாமல் ஸ்நேஹத்துடன் இருக்கும் அப்பாதுகைகளை சரணமடைகின்றேன்.  இப்போதும் பெரியோர்கள் திருவடியில் தீர்த்த த்தைச் சேர்த்து எல்லோரும் சாப்பிடுவார்கள்.  பெருமாள் திருவடிக்கு இப்படிப்பட்ட பெருமையிருப்பதால்தான் ஆழ்வார் எப்போதும் திருவடியைப் பற்றியே பேசுகிறார்.

 

Wednesday, October 21, 2009

திஷ்டந்து ச்ருதய: ததோபி மஹிதம் ஜாகர்த்தி தத் பாதுகே
தத்தாத்ருக் ப்ரதநாய தாவககுணராமாய ராமாயணம்
யஸ்யாஸீதரவிந்தஸம்பவவதூமஞ்ஜீரசிஞ்ஜாரவ
ஸ்பர்த்தாதுர்த்தரபாதபதபணிதி: வல்மீகஜன்மா கவி
:
तिष्ढन्तु श्रुतयस्ततोपि महितं जागर्ति तत्पादुके
तत्तढ्रुग्प्रथनाय तावकगुणग्रामाय रामायणम्
यस्यासीदरविन्दसम्भववधू मञ्जीरशिञ्ज़ारव
स्पर्धादुर्धरपादबध्दफ़णितिर्वल्मीकजन्मा कवि
ஏ பாதுகையே உன் மஹிமை விஷயத்தில் வேதங்களிருக்கட்டும். வேதத்தைக்காட்டிலும் மிகவுமுயர்ந்தது ஸ்ரீமத்ராமாயணம். அதில் உன்னுடைய குணங்களைப்பற்றி எல்லையில்லாமல் சொல்லியிருக்கிறது. வேதம் தப்பான அர்த்தம் சொல்வதில்லை என்பதால் அதற்கு உயர்த்தி ஏற்பட்டிருக்கிறது. ஸ்ரீமத்ராமாயணம் ஒருவர் பண்ணினதில்லை, ஸரஸ்வதி ஸந்தோஷமாய் நடந்துபோகும் ஸமயத்தில் அவள் காலில் அணிந்து கொள்ளப்பட்ட சிலம்பினின்றுமுண்டான சப்தமே. அதாவது, வால்மீகிக்கு தாயார் பெருமாளுடைய அனுக்ரஹத்தினால் நடந்த சஙதிகள் தவறுதலின்றி தோன்றி, சிறிதும் தப்பில்லாமல் அவரால் எழுதப்பட்டது ஸ்ரீமத்ராமாயணம்
.
ए पादुकैये उन् महिमै विशयत्तिल् वेदङ्गळिरुक्कठ्ठुम् .वेदत्तैक्काठ्ठिलुम मिगवुमुयर्न्दतु श्रीमतरामायणम्. अतिल उन्नुडैय गुणङ्गळैप्पठरि एल्लैयिल्लामल सोल्लियिरुक्किरतु. वेदम तप्पान अर्थम सोल्लुवदिल्लै एन्बताल अतर्क्कु उयर्ति एरपठ्ठ्रिरुक्किरतु.श्रीमतरामायणम ओरुवर पण्णिनतिल्लै. सरस्वति सन्दोशमाय नडन्दुपोकुम समयत्तिल अवळ कालिल अणिन्दु कोळ्ळप्पठ्ठ सिलम्बिनिनुमुण्डान सब्दमे. अतावतु वालमीकिक्कु तायार पेरुमाळुडैय अनुग्रहत्तिनाल नडन्द सङ्गतिकळ तवरुतलिनरि तोनरि, सिरितुम तप्पिल्लामल अवराल एळुतप्पट्टतु श्रीमतरामायणम्
திஷ்டந்து ச்ருதய: ததோபி மஹிதம் ஜாகர்த்தி தத் பாதுகே
தத்தாத்ருக் ப்ரதநாய தாவககுணராமாய ராமாயணம்
யஸ்யாஸீதரவிந்தஸம்பவவதூமஞ்ஜீரசிஞ்ஜாரவ
ஸ்பர்த்தாதுர்த்தரபாதபதபணிதி: வல்மீகஜன்மா கவி
:
तिष्ढन्तु श्रुतयस्ततोपि महितं जागर्ति तत्पादुके
तत्तढ्रुग्प्रथनाय तावकगुणग्रामाय रामायणम्
यस्यासीदरविन्दसम्भववधू मञ्जीरशिञ्ज़ारव
स्पर्धादुर्धरपादबध्दफ़णितिर्वल्मीकजन्मा कवि
ஏ பாதுகையே உன் மஹிமை விஷயத்தில் வேதங்களிருக்கட்டும். வேதத்தைக்காட்டிலும் மிகவுமுயர்ந்தது ஸ்ரீமத்ராமாயணம். அதில் உன்னுடைய குணங்களைப்பற்றி எல்லையில்லாமல் சொல்லியிருக்கிறது. வேதம் தப்பான அர்த்தம் சொல்வதில்லை என்பதால் அதற்கு உயர்த்தி ஏற்பட்டிருக்கிறது. ஸ்ரீமத்ராமாயணம் ஒருவர் பண்ணினதில்லை, ஸரஸ்வதி ஸந்தோஷமாய் நடந்துபோகும் ஸமயத்தில் அவள் காலில் அணிந்து கொள்ளப்பட்ட சிலம்பினின்றுமுண்டான சப்தமே. அதாவது, வால்மீகிக்கு தாயார் பெருமாளுடைய அனுக்ரஹத்தினால் நடந்த சஙதிகள் தவறுதலின்றி தோன்றி, சிறிதும் தப்பில்லாமல் அவரால் எழுதப்பட்டது ஸ்ரீமத்ராமாயணம்
.
ए पादुकैये उन् महिमै विशयत्तिल् वेदङ्गळिरुक्कठ्ठुम् .वेदत्तैक्काठ्ठिलुम मिगवुमुयर्न्दतु श्रीमतरामायणम्. अतिल उन्नुडैय गुणङ्गळैप्पठरि एल्लैयिल्लामल सोल्लियिरुक्किरतु. वेदम तप्पान अर्थम सोल्लुवदिल्लै एन्बताल अतर्क्कु उयर्ति एरपठ्ठ्रिरुक्किरतु.श्रीमतरामायणम ओरुवर पण्णिनतिल्लै. सरस्वति सन्दोशमाय नडन्दुपोकुम समयत्तिल अवळ कालिल अणिन्दु कोळ्ळप्पठ्ठ सिलम्बिनिनुमुण्डान सब्दमे. अतावतु वालमीकिक्कु तायार पेरुमाळुडैय अनुग्रहत्तिनाल नडन्द सङ्गतिकळ तवरुतलिनरि तोनरि, सिरितुम तप्पिल्लामल अवराल एळुतप्पट्टतु श्रीमतरामायणम्

Friday, October 9, 2009

प्रतय्क्षयन्ति परिशुद्धियो यथावत रामायणे रघुपुरन्दरपादरक्षे
शक्ष्व्तप्रपञ्चितमिदंपरयैव व्रुत्तया संक्षेपविस्तरदशासु तवानुभावम्

ப்ரத்யக்‌ஷயந்தி பரிசுத்ததியோ யதாவத் ராமாயணே ரகுபுரந்தர பாதர‌க்ஷே
சச்வத் ப்ரபஞ்சித மித்ம்பரயைவ வ்ருத்த்யா ஸம்க்ஷேபவிஸ்தரதசாஸூ தவாநுபாவம்.

ஸ்ரீமத்ராமாயண மஹாபாரதங்களில் பாதுகையின் அல்லது பெருமாள் பக்தர்களின் பெருமையைப்பற்றி எங்கே சொல்லி இருக்கிறதென்றால் ஸ்ரீமத் ராமாயண பாரதங்களில் இவர்களின் பெருமை சொல்லியிருக்கிறதென்பதை தெளிந்த புத்தியுள்ளவர்கள் கண்ணால் பார்ப்பது போல் காண்கிறார்கள். ஸ்ரீமத் ராமாயண கதை முழுவதையும் நூறு ஸ்லோகமுள்ள ஸ்ங்க்ஷேப ராமாயணத்தில் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறது. அவ்விடத்திலும் பாதுகையின் பெருமையைப் பற்றி சொல்லியிருக்கிறது. மேலும் விஸ்தாரமாயும் சொல்லியிருக்கிறது. அப்படிப்பட்ட உனது பெருமையை கலக்கமில்லாத அறிவு உடையோர்கள் காண்கிறார்கள். “परिशुद्धधिय:”
என்பதற்கு கருத்து-உலகில் பெரும்பாலும் எல்லோருடைய புத்தியும் கலங்கியேயிருக்கிறது. அது தெளிவதற்கு மூன்று காரணமுண்டென்று ஸ்ரீதேசிகன் அருளிச்செய்திருக்கிறார். அதாவது, “திருமுகப்பாசுரமும், ஸதாசாரியாநுக்ரஹமும் ஸத்ஸம்ப்ரதாயமும்” என்று, ஸ்ரீமத் ராமாயணத்தில், ‘பொய் சொல்லக்கூடாது, விரோதிகளிடத்திலும் தயையுடனிருக்கவேண்டும், எப்படிப்பட்ட கஷ்டம் நேர்ந்தாலும் பொறுமை வேண்டும், கர்வம் கூடாது ஒழிவு வேண்டும், தாய் தகப்பன் சொன்ன வார்த்தையைக் கேட்க வேண்டும், ஒரு காரியத்தை ஆரம்பிக்கும்போது இக்கார்யம் இப்படித்தான் முடியுமென்று தவறாத தெளிந்த யோஜனை வேண்டும்” இவை முதலான அனேக சங்கதிகLLள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஸ்ரீமத் ராமாயணத்தை நெட்டுருவாகச் சொல்லுகிறவர்களும் இந்த ஸங்கதிகள் தன்னுடைய அனுஷ்டானத்துக்கு வந்ததா? வரவில்லையா? என்பதை கொஞ்சமேனும் நினைக்கிறார்களில்லை. ஆத்மாவைப் பற்றிச் சொல்லுகிற எல்லாப் புஸ்தகங்களிலும் தன்னுடைய தாழ்மையை நினைக்கவேண்டுமென்றே எழுதியிருக்கிறது. வித்வான்களெல்லாரும் இதைப் பற்றியே உபந்நியாஸஞ் செய்கிறார்கள். முன்னிருந்த பெரியோர்கள் தன்னைக்கீழ்ப்பட்டவனென்று சொல்லியிருப்பதெல்லாம் நமக்காகத்தானென்றும் சொல்லுவார்கள். ஆகிலும் ஒருவருக்கும் தனது தாழ்மை தெரிகிறதில்லை. தனது தாழ்மை தோன்றினால் பிறர் வைதால் கோபம் வாராதென்று தேசிகன் அருளிச்செய்திருக்கிறார். அவ்வடையாளமுள்ளவன் இவ்வுலகில் ஒருவனாகிலும் கிடைப்பது மிக அரிது. ஆகையால் முன் சொன்ன மூன்று காரணங்களால் தெளிந்த புத்தியுள்ளவர்களுக்கு எல்லா நல்ல புஸ்தகங்களிலும் நல்ல அபிப்ராயம் தோன்றும். அதனால் நல்ல ஸௌக்யத்தையடைவார்கள்.


35. அல்பச்ருதைரபி ஜனைரநுமீயஸே த்வம்
ரங்கேசபாது நியதம் நிகமோபகீதா
ஸாரம் ததர்த்தமுபப்ருஹ்மயிதும் ப்ரணீதம்
ராமாயணம் தவ மஹிம்நி யத: ப்ரமாணம்
.

अल्पश्रुतैरपि जनैरनुमीयसे त्वम
रङ्गेशपादु नियतँ निगमोपगीता
सारँ तदर्थमुपब्रुह्मनियितुँ प्रणीतम
रामायणम तव महिम्नि यत: प्रामाणम्
இந்தப்பாதுகையைப்பற்றி வேதத்தில் சொல்லியிருக்கிறதாவென்றால், வேதங்களெல்லாமறிந்தவர்கள் “இந்த இடத்தில் பாதுகையின் பெருமையைப் பற்றி சொல்லியிருக்கிறது” என்று தெரிந்து கொள்கிறார்கள். சிறிது வேதபாகத்தைத் தெரிந்தவர்கள்கூட”பாதுகையின் மஹிமை வேதத்தில் சொல்லியிருக்கிறது” என்று ஊகித்துக்கொள்கிறார்கள். எப்படியென்றால், கொஞ்சம் வேதாத்யயனம் பண்ணினவர்களும் அவசியமாய் அறிய வேண்டியதான உயர்ந்த் வேதார்த்தங்களை வால்மீகி மஹருஷியானவர் ஸ்ரீமத்ராமாயணத்தில் சொல்லியிருக்கிறார். அதில் பாதுகையின் பெருமையப் பற்றிச் சொல்லியிருக்கிறார். வேதத்தில் பாதுகா ப்ரபாவமில்லாத போனால் ராமாயணத்தில் அதைப்பற்றிச் சொல்லுவாரா? மூலத்தில் இல்லாத ஸங்கதிகளை வியாக்யானத்தில் சொல்லுவார்களா என்கிற யுக்தியினால் ஊஹிக்கிறார்கள்.
इन्दप्पादुकैयैप्प्ठ्री वेदत्तिल सोल्लियिरुक्किरदावेन्राल्, वेदङकळेल्लामरिन्दवर्कळ्
“इन्द इडत्तिल पादुकैयिन पेरुमैप्पठ्रि सोल्लियिरुक्किरतु” एन्रु तेरिन्दुकोळ्किरार्गळ्.
सिऱिदु वेदभागात्तै तेरिन्दवर्कळ्कूड “पादुकैयिन् महिमै वेदत्तिल सोल्लियिरुक्किरतु एन्रु ऊहित्तुक्कोळ्किरारगळ्. एप्पडियेन्ऱाल कोनजम् वेदाध्ययनम पण्णिनवर्गळुम अवशियमाय अऱिय वेण्डियतान उयर्न्द वेदार्तङगळै वालमीगी महरुषियानवर श्रीमतरामायणत्तिल सोल्लियिरुक्किरार्. अत्तिल पादुकैयिन पेरुमैयैप पठ्रिच सोल्लियिरुक्किऱार् वेदत्तिल पादुका प्रभावमिल्लादु पोनाल रामायणत्तिल आतैप्पठ्रि सोल्लुवारा? मूलत्तिल इल्लाद सङ्गतिकळै व्याक्यान्त्तिल सोल्लुवार्कळा एन गिऱ युक्तियिनाल ऊहीक्किरार्गळ्.

Friday, October 2, 2009

वेदोपब्रुह्मणकुतूहलिना निबद्धं
विश्वाम्भराश्रुतिभवेन महर्षिणा यत्
व्यासेन यच्च मधुसूदनपादरक्षे
द्वे चक्षुषि त्वदनुभावमवेक्षितुं न:


வேதோபப்ருஹ்மண குதூஹலினா நிபத்தம்
விஷ்வம்பராஸ்ருதிபவேன மஹர்ஷிணா யத்
வ்யாசேன யச்ச மதுஸூதனபாதரஷே
த்வே சஷுஷி த்வதனுபாவமவேஷிதும் ந:

வேதத்தினுடைய
உண்மையான அர்த்தத்தை எல்லோரும் தெரிந்துகொள்வது மிகக் கஷ்டம். ஆகையால் நன்றாய்த் தெரியப்படுத்துவதற்காக ஸ்ரீவால்மீகி மஹரிஷி ஸ்ரீமத் ராமாயணத்தையும் ஸ்ரீவேதவியாஸ பகவான் ஸ்ரீமஹாபாரத்தையும் செய்தருளினார்கள். அந்த இரண்டும் பாதுகையின் பெருமையைப் பார்ப்பதற்கு எங்களுக்கு இரு கண்களாக இருக்கின்றன. அதாவது, அந்த இரண்டு க்ரந்தங்களிலும் பாதுகையின் பெருமையைப் பற்றி அதிகமாய்ச் சொல்லியிருக்கிறது. அவ்விரண்டு க்ரந்தத்திலும் பெருமாள் திருவடியில் பக்தரானவர்களுடைய பெருமையைச் சொல்லியிருக்கிறது.
वेदत्तिनुडैय उण्मैयान अर्त्थ्तै एल्लॊरुम् तेरिन्दु कोळ्वतु मिकक् कष्ठं. आकैयाल्
अतै नन्र्रायत् तेरियप्पडुत्तुवतर्काक श्रीवाल्मीकि महरिषि श्रीमद्रामायणत्तैयुं श्रीवेदव्यासभगवान् श्रीमहाभारतत्तैयुम् सेयतरुळिनार्गळ्. अन्द इरण्डुम् पादुकैयिन् पेरुमैयैप्पार्प्पदर्क्कु एन्गळुक्कु इरु कण्कळाक इरुक्किन्रन. अथावतु अन्द इरण्डु ग्रन्दन्गळिलुम् पादुकैयिन् पेरुमैयैप्पर्रि अतिकमाय् सोल्लियिरुक्किरतु. अव्विरण्डु ग्रन्दत्तिलुम् पेरुमाळ् तिरुवडियिल् भक्तारानवर्कळुडैय पेरुमैयैच् चोल्लियिरुक्किरतु.


वेदोपब्रुह्मणकुतूहलिना निबद्धं विश्वाम्भराश्रुतिभवेन महर्षिणा यत्

व्यासेन यच्च मधुसूदनपादरक्षे द्वे चक्षुषि त्वदनुभावमवेक्षितुं न:

वेदत्तिनुडैय उण्मैयान अर्त्थ्तै एल्लॊरुम् तेरिन्दु कोळ्वतु मिकक् कष्ठं. आकैयाल्

अतै नन्र्रायत् तेरियप्पडुत्तुवतर्काक श्रीवाल्मीकि महरिषि श्रीमद्रामायणत्तैयुं श्रीवेदव्यासभगवान् श्रीमहाभारतत्तैयुम्  सेयतरुळिनार्गळ्. अन्द इरण्डुम् पादुकैयिन् पेरुमैयैप्पार्प्पदर्क्कु एन्गळुक्कु इरु कण्कळाक इरुक्किन्रन.अथावतु अन्द इरण्डु ग्रन्दन्गळिलुम् पादुकैयिन् पेरुमैयैप्पर्रि अतिकमाय् सोल्लियिरुक्किरतु. अव्विरण्डु ग्रन्दत्तिलुम् पेरुमाळ् तिरुवडियिल् भक्तारानवर्कळुडैय पेरुमैयैच् चोल्लियिरुक्किरतु.

§Å§¾¡ÀôÕ‹Á½Ìà¸Ä¢¿¡ ¿¢Àò¾õ

Å¢îÅõÀáîÕ¾¢À§Å¿ Á†÷„¢½¡ Âò

ù¡§…¿ Âîº ÁÐ…¥¾¿ À¡¾Ã§‡

ò§Å º‡¤„£ òÅÐÑÀ¡ÅÁ§Å‡¢Ðõ ¿:

§Å¾ò¾¢Û¨¼Â¯ñ¨Á¡ɠ «÷ò¾ò¨¾±ø§Ä¡Õõ¦¾¡¢óЦ¸¡ûÅÐ Á¢¸ì ¸‰¼õ. ¬¨¸Â¡ø «¨¾      ¿ýÈ¡ö ¦¾¡¢ÂôÀÎòОü¸¡ ‚Å¡øÁ£¸¢ Á†¡¢„¢ ‚Áò áÁ¡Â½ò¨¾Ôõ ‚§Å¾Å¢Â¡ŠÀ¸Å¡ý ‚Á†¡À¡Ã¾ò¨¾Ôõ ¦ºö¾ÕǢɡ÷¸û. «ó¾ þÃñÎõ À¡Ð¨¸Â¢ý ¦ÀÕ¨Á¨Â À¡÷ôÀ¾üÌ ±í¸ÙìÌ þÕ ¸ñ¸Ç¡¸ þÕ츢ýÈÉ. «¾¡ÅÐ, «ó¾ þÃñÎ ìÃó¾í¸Ç¢Öõ À¡Ð¨¸Â¢ý ¦ÀÕ¨Á¨Âô ÀüÈ¢  «¾¢¸Á¡öî ¦º¡øÄ¢Â¢Õ츢ÈÐ. «ùÅ¢ÃñÎ ìÃó¾ò¾¢Öõ ¦ÀÕÁ¡û ¾¢ÕÅÊ¢ø Àì¾Ã¡ÉÅ÷¸Ù¨¼Â ¦ÀÕ¨Á¨Âî ¦º¡øÄ¢Â¢Õ츢ÈÐ.

Sunday, September 27, 2009

நிச்சேஷமம்பரதலம் யதி பத்ரிகா ஸ்யாத் ஸப்தார்ணவீ யதி ஸமேத்ய மஷீ பவீத்ரீ

வக்தா ஸஹஸ்ரவதந: புருஷ ஸ்வயம் சேத் லிக்யதே ரங்கபதிபாதுகயோ:ப்ரபாவ:

निश्शेषमम्ब्रतलं यदि पात्रिका स्यात् सप्तार्णवी यदि समेत्य मषी भवीत्री वक्ता सहस्र्वदन: पुरुष: स्वयञ्चेत लिख्येत रङ्गपतिपादुकयॊ: प्रभाव: ३१
पादुकैयिन् पेरुमैक्कु अळविल्लै एन्बदै ओरुविदमाय् अरुळिच्चेय्गिरार्. पादुकैयिन् पेरुमैयै एळुदुवदानाल् आकासमेल्लाम् कडितमाक आगवेण्दुम्. एल्ला समुद्र्न्गळुम् मसियाग वेण्डुम्. “सहस्र्सीर्षा:” एन्रु श्रीपुरुष् शूक्तत्तिल् सोल्लप्पठ्ठ पेरुमाळ् सोल्लवेण्डुम्. इप्पडियिरुन्दाल् पादुकैयिन् महिमैयै एतो कोन्जम् एळुतलाम्.
अन्रियिल् वक्ता स्वयं चेत् तनतु पादुकैयिन् पेरुमैयैप् पठ्रि थाने सोल्लुवतु वळक्कमिल्लामलिरुन्दालुम्, थाने सोल्लुकिरवनायिरुन्दाल् एल्ला जनङ्गलुम् सेर्न्दु पादुकैयिन् प्र्भावम् एळुतमुडियलाम्.
பாதுகையின் பெருமைக்கு அளவில்லையென்பதை ஒருவிதமாய் அருளிச்செய்கிறார். பாதுகையின் பெருமையை எழுதுவதானால் ஆகாசமெல்லாம் காகிதமாக ஆகவேண்டும்.எல்லா ஸமுத்ரங்களும் மசியாக வேண்டும். “ஸஹஸ்ரசீர்ஷா:” என்று ஸ்ரீபுருஷஸூக்தத்தில் சொல்லப்பட்ட பெருமாள் சொல்லவேண்டும். அவர்தான் எழுதவேண்டும். இப்படியிருந்தால் பாதுகையின் மஹிமையை ஏதோ கொஞ்சம் எழுதலாம். அன்றியில் “वक्ता स्वयँ चेत्” தனது பாதுகையின் பெருமையைப்பற்றி தானே சொல்லுவது வழக்கமில்லாமலிருந்தாலும் தானே சொல்லுகிறவனாயிருந்தால் எல்லா ஜனங்களும் சேர்ந்து பாதுகையின் ப்ரபாவம் எழுத முடியலாம்.

Saturday, September 26, 2009


प्रभाव पद्धति:त्रुतीया
3. ப்ரபாவ பத்ததி
वन्दे तद्र्ङगनथस्य मान्यम् पादुकयोर्युगम्
उन्नतानामवनति: नतानाम् यत्र चोन्नति:

வந்தே தத் ரங்கநாதஸ்ய மாந்யம் பாதுகயோர்யுகம்
உந்நதாநாமவநதி: நதாநாம் யத்ர சோந்நதி:
பெருமாளைச் சேர்ந்த வஸ்த்துக்கள் அனேகம் இருக்க, பாதுகையென்பது ஸ்தோத்ரம் பண்ணத்தக்க பெருமையுள்ளதாவென்றால் இந்தப் ப்ரபாவ பத்ததியில் எழுபது ஸ்லோகத்தினால் பாதுகையின் பெருமையை அருளிச்செய்கிறார். எந்தப் பாதுகையை வணங்காதவர்களுக்குத் தாழ்ந்த தன்மையுண்டாகிறதோ, எந்த பாதுகையை வணங்கினவர்களுக்கு உயர்த்தியுண்டாகிறதோ எல்லாராலும் கொண்டாடப்பட்ட அந்த ஸ்ரீரங்கநாதனுடைய இரண்டு பாதுகைகளை வணங்குகின்றேன்.ஆழ்வாரை வணங்கினவர்கள் மோக்ஷத்தையடைவார்கள், ஆழ்வாரை வணங்காதவர்களுக்கு ஸம்ஸாரம் போகாது.
पेरुमाळैच चेर्न्द वस्त्तुक्कळ अनेकम इरुक्क पादुकैयेन्बदु स्तोत्त्रम पण्णत्त्त्क्क पेरुमैयुळ्ळदावेन्राल इन्द्प्रभाव पद्धतियिल एळुबतुस्लोकत्तिनाल पादुकैयिन पेरुमैयै अरुळिच चेय्किरार्. एन्दप पादुकैयै वणङ्गादवर्कळुक्कु ताळ्न्द तन्मैयुण्डाकिरतो एन्द्प्पादुकैयै वणङ्गिनवर्कळुक्कु उयर्त्तियुण्डाकिरतो एल्लारालुम कोण्डाडप्प्ठ्ठ अन्द श्री रङ्ग़नाथनुडैय इरण्डु पादुकैकळै वणङ्गुकिन्रेन्. आळ्वारै वणङिनवर्ग़ळ मोक्शत्तैयडैवार्गळ्. आळ्वारै वणङगातवर्कळुक्कु समसारम पोकातु.

Wednesday, September 23, 2009

ஸ்லோகம் 28.
பத்யேந தேவி சடகோபமுநிஸ்தவாஸீத்
தஸ்யாபி நாமவஹநாந்மணிபாதுகே த்வம்
சேஷீ பபூவ யுவயோரபிசேஷசாயீ
சேஷம் த்வசேஷமபி சேஷபதே ஸ்திதம் வ:
स्लोकम 28
पद्येन देवि श्ठकोपमुनिस्तवासीत
तस्यापि नामवहनान्मणिपादुके त्वम
शेषी पभुव युवयोरपि सेषशायी
शेषम त्वशेषमपि शेषपदे स्थितँ व:
उन्नैप्पऱ्रि नम्माळ्वार पाडिनार्. अतनाल अवर उनक्कुक कीष पठ्ठिरुन्दवराक आनार्. नी अवर पेयरै वहित्तुकोन्डतिनाल अवरुक्कुक कीष्प्पडिन्दाय्. उङगळिरुवरुक्कुम पेरुमाळ एजमानर्. नीङगळ मून्रु पेयरुम (पेरुमाळ्, नम्माळ्वार्, पादुकै) मठ्र उलकङ्कळुक्केल्लाम यजमानरकळाक आगिन्रीर्गळ्. पेरुमाळ एल्लोरुक्कुम यजमानर्. पेरुमाळैच चेर्न्द्वावर्कळूक्कुळ्ळे ओरुवरुक्कोरुवर ताऴ्वुमुयर्थियुमुण्डु
உன்னைப்பற்றி நம்மாழ்வார் பாடினார். அதனால் அவர் உனக்குக் கீழ்ப்பட்டிருந்தவராக ஆனார்,நீ அவர் பெயரை வஹித்துக்கொண்டதினால் அவருக்குக் கீழ்படிந்தாய். உங்களிருவருக்கும் பெருமாள் எஜமானர். நீங்கள் மூன்று பெயரும் (பெருமாள், நம்மாழ்வார், பாதுகை) மற்றவுலகங்களுக்கெல்லாம் யஜமானர்களாக ஆகின்றீர்கள். பெருமாள் எல்லோருக்கும் யஜமானர். பெருமாளைச் சேர்ந்தவர்களுக்குள்ளே ஒருவருக்கொருவர் தாழ்வுமுயர்த்தியுமுண்டு.


ஸ்லோகம் 29
விந்த்யஸ்தம்பாதவிஹதகதேர் விஷ்வகாசாந்தஸிந்தோ:
கும்பிஸூநோரஸுரகபலக்ராஸிந:ஸ்வரைபா
நித்யம் ஜாதா சடரிபுதநோர்நிஷ்பதந்தீ முகாத் தே
ப்ராசீநாநாம் ச்ருதிபரிஷதாம் பாதுகே பூர்வகண்யா

विन्ध्यस्तम्भाहविहतगतॆर्विष्व्गाचान्तसिन्धो:
कुम्भीसुनोरसूरक्बलग्रासिन:स्वैरभाषा
नित्यम्जाता शठरिपुतनोर्निष्पतन्ति मुखात्ते
प्राचीनानँ श्रुतिपरिशदाँ पादुके पूर्वगण्या
பாதுகையே! தமிழ் பாஷையானது நித்யமாய் இருக்கிறது. அகஸ்தியரென்ற் மஹரிஷிக்கு மிகவும் இஷ்டமானது. அப்படியிருந்தும் அப்பாஷைக்கு விசேஷ கவுரமில்லாமலிருந்தது. நீ ஆழ்வாராகஅவதரித்து உன்னுடைய முகத்திலிருந்து திருவாய்மொழியாக வெளிப்பட்டபடியால் வேதத்துக்கு மேலே கெளரவமேற்பட்டது. அகஸ்தியர் விந்தியமென்ற மலையை அடக்கினார். ஸமுத்திரத்தை ஆசமனம் செய்தார். வாதாபி என்ற அஸுரனைப் புஜித்து ஜரிக்கப்பண்ணினவர். இன்னும் அனேகம் ஆச்சரியமான காரியத்தைச் செய்தார்.
पादुकैये! तमिळ भाषैयानतु नित्यमाय इरुक्किरतु, अगस्तयर एन्र महरिषिक्कु मिगवुमिष्ठ्मानतु. अप्पडियिरुन्तुम अभ्भाषैक्कु ग़ोउरवमिल्लातिरुन्ददु. नी आळवाराक अवतरित्तु उन्नुडैय मुकत्तिलिरुन्दु तिरुवाय्मोळियाक वेळिप्पठ्ठ्पडियाल वेदत्तुक्कु मॅले गोरवमेर्प्ट्टतु. अगस्त्यरेन्बवर विन्ध्यमेन्र मलैयै अडक्किनार्. शमुद्रत्तै अडक्किनार्. वातपि एन्किऱ असुरनैप भुजित्तु जरिक्कप्पण्णिनवर्. इन्नुम अनेकम आच्चर्यमान कार्यत्तैच चेyय्तार्.
ஸ்லோகம் 30
சடகோப இதி ஸமாக்யா
தவ ரங்கதுரீணபாதுகே யுக்தா
ஸூதே ஸஹஸ்ரமேவம்
ஸூக்தீ: ஸ்வயமேவ யந்மயா பவதீ
शठकोप इति समाखया तव रङगतुरीण पादुके युक्ता
सूते सह्स्रमेवँ सूक्ती:स्वयमेव यन्मया भवती
ஏ பாதுகையே! நம்மாழ்வார் பெருமாளைப் பற்றி ஆயிரம் பாசுரம் பாடினார். நீ என்னைக் கொண்டு ஆயிரம் ஸ்லோகங்கள் பண்ணுகிறாய். ஆகையால் அந்தப் பெயர் உனக்குத்தகும். இந்தப்பெயர் வருவதற்குத்தான் லக்ஷம் ஸ்லோகம் பண்ணும் படி நியமிக்கவில்லை.
ए पादुकैये नम्माळ्वार् पेरुमाळैप् पट्रि आयिरम् पासुरम् पाडिनार्। नी एन्नैकोन्डु आयिरम् स्लोकन्गल् पण्णुकिराय् आगैयाल् अन्तप् पेयर् उनक्कुत्तकुम्। इन्तप् पेयर् वरुवतर्क्कुत्तान् लक्षम् स्लोकम् बण्णुम्ब्बडि नियमिक्कविल्लै

इति श्री कवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य
श्रीमद्वेदान्ताचार्यस्य क्रुतिषु श्रीरङ्गनाथ पादुका सहस्रे समाख्या
पद्धति द्वितिया

Friday, September 11, 2009


ஸ்லோகம் 27
சய்யாத்மநாமதுரிபோரஸி சேஷபூதா
பாதாச்ரயேண ச புந: த்விகுணிக்ருதம் தத்
பூயோபி பாகவதசேஷதயா ததேவ
வ்யங்க்தும் பதாவநி சடாரிபதம் பிபர்ஷி
स्लोकम 27
शय्यत्म्ना मधुरिपोरसि शेषभुता
पादाश्रयेण च पुनर्द्विगुणिक्रुतँ तत
भूयोपि भागवतशेषतया तदेव
व्यङ्क्तुं पदावनि श्ठारिपदं बिभर्षि

ए पादुकैये नी पेरुमाळुक्कुप् पडुक्कैययिरिन्तु दासनानाय्। इन्नुम् तणिन्धु कैन्गर्यम् सेय्यवेन्डुमेन्द्रु पादुकैयानाय्। इतुवुम् पोरातु भागवतर्कळुक्कु तणिन्दिरुक्क वेण्डुम् एन्द्रु एण्णिये आल्वारुडैय पेयरै वैत्तुक्कोन्डाय्
ஏ பாதுகையே நீ பெருமாளுக்குப் படுக்கையாயிருந்து தாஸனானாய். இன்னும் தணிந்து கைங்கர்யம் செய்யவேண்டுமென்று பாதுகையனாய். இதுவும் போராது பாகவதர்களுக்கு தணிந்திருக்கவேண்டுமென்று எண்ணியே ஆழ்வாருடைய பெயரை வைத்துக்கொண்டாய்.

Wednesday, August 26, 2009

ய: ஸப்தபர்வவ்யவதாநதுங்காம்
சேஷத்வகாஷ்டாமபஜந் முராரே:
தஸ்யாபி நாமோதவஹநாத் த்வயாஸெள
லகூக்ருதோபூத் சடகோப ஸூரி:

स्लोकम 26
य: सप्तपर्वव्यवधानतुङ्काम् सॆषत्वकाष्टामबजन् मुरारॆ:
तस्यापि नामॊद्वहनात् त्वयासौ लघूक्रुतॊभूत् सठकॊपशूरि:

ஏ பாதுகையே ! நம்மாழ்வார் பெருமாளுடைய பக்தர்கள் வரிசையில் நான் எட்டாவதாயிருக்கிறேன் என்று ஸாதித்தார். அவ்விஷயத்தில் அவரை ஜயிப்பதற்காகவே அவர் பெயரை நீ வஹித்துக்கொண்டு ஒன்பதாவதாய் ஆகிவிட்டாய். ஒருவரின் பெயரை ஒருவர் வைத்துக்கொள்வது அவருக்குத்தாஸன் என்பதைக் காண்பிக்கும் என்பது சாஸ்த்திர ஸித்தம்.
ए पादुकैये नम्माळ्वार पेरुमाळुडैय भक्तर्गळ वरिसयिल नान एठ्ठावतायिरुक्किरेन एन्ऱु सातित्तार्. अव्विषयत्तिल अवरै जयिप्पतर्काकवे अवर पेयरै नी वहित्तुक्कोण्डु ओन्ब्तावताय आगिविठ्ठाय्. ओरुवर पेयरै ओरुवर वैत्तुकोळ्वतु अवरुक्कुत दासन एन्बदैक काण्बिक्कुम एन्बतु सास्त्रसित्तम्.

स्लोकम 25
आकर्ण्य कर्णाम्रुतमात्मवन्तो गाथासहस्रम शठकोपसूरे:
मञ्जुप्रणादाँ मणिपादुके त्वाम तदेकनामानमनुस्मरन्ति

ஆகர்ண்ய கர்ணாம்ருதமாத்மவந்த: காதாஸஹஸ்ரம் சடகோபஸூரே:
மஞ்ஜூப்ரணாதாம் மணிபாதுகேத்வாம் ததேகநாமநமநுஸ்மரந்தி

பெரியோர்களுக்கு நம்மாழ்வாருடைய பாசுரம் மிக இன்பமாயிருக்கிறது.அதே மாதிரியாகவே உன்னுடைய சப்தமிருக்கிறது. உலகத்தில் ஒருவர் மாதிரி ஒருவர் பேசினால் அவர் வரும்பொழுது அவரே வந்துவிட்டார் என்று சொல்வது வழக்கம். அதனால் நம்மாழ்வாருடைய பெயரை உனக்கு வைத்துவிட்டார்கள்.

पेरियोर्गळुक्कु नम्माळ् वारुडैय पासुरम् मिग इन्बमायिरुक्किरतु.अते मातिरियाकवे उन्नुडैय सब्तमिरुक्किरतु. उलकत्तिल् ओरुवर् मातिरि ओरुवर् पेसिनाल् अवर् वरुम्पोऴुतु अवरे वन्दुविठ्ठार् एन्रु सोल्वतु वळक्कम्. अतनाल् नम्माळ्वारुडैय पेयरै उनक्कु वैत्तुविठ्ठार्गळ्.

Friday, August 21, 2009

स्लोकम 23
நியதம் மணிபாதுகே ததான: ஸ முனிஸ்தே ஸடகோப இத்யபிக்யாம்
த்வது பாச்ரிதபாதஜாதவம்ஸ ப்ரதிபத்த்யை பரமாததாந ரூபம்
नियतं मणिपादुके दधान: स मुनिस्ते शठकोप इत्यभिक्याम्
त्वतुपाश्रितपातजातवंश प्रतिपत्त्यै परमाततान रूपम्
ஏ பாதுகையே! நம்மாழ்வார் உன்னிடத்தில் பக்தியினால் உனது “சடகோபன்”என்ற பெயரை வஹித்து, சூத்ர வம்சத்தைக் கொண்டாடுவதற்காகவே அந்த வம்சத்தில் அவதரித்தார்.
ए पादुकैये नम्माळ्वार उन्निडत्तिल भक्तियिनाल उनतु “शठकोपन्” एन्ऱ पेयरै वहित्तु सुत्त्तिर वम्सत्तैक कोण्डादुवतर्काकवे अन्त वम्स्सतिल अवतरित्तार्.
ஸ்லோகம் 24
मुनिना मणिपादुके त्वया च प्रथिताभ्यां शठकोपसंञ्यैव
द्वितयं सकलोपजिव्यमासीत् प्र्थमेन श्र्रुतिरन्यतस्तदर्त
:
முநிநா மணிபாதுகே த்வயா ச
ப்ரதிதாப்யாம் சடகோபசம்ஜ்ஞயைவ
த்விதயம் ஸகலோபஜீவ்யமாஸீத்
ப்ரதமேன ச்ருதிரந்யதஸ்ததர்த்த:

ஏ பாதுகையே நீயும் நம்மாழ்வாரும் ஒரு விதமான காரியஞ்செய்தீர்கள் . அதனால் உங்களிருவர்களுக்கும் "சடகோபன்" என்று ஒரே பெயர். நம்மாழ்வார் வேதத்தைத் தமிழாகச் செய்து எல்லோரும் சொல்லும்படியாகப்பண்ணினார். நீ வேதத்தினுடைய அர்த்தமான பெருமாளைச் சண்டாளன் கூட ஸேவிக்கும்படியாக வீதியிலே எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வந்தாய்.


ऎ पादुगैयॆ नीयुम् नम्माऴ्वारुम् ओरु वितमान कारियञ्सेय्तीर्गळ् . अतनाल् उङ्कळिरुवर्कळुक्कुम् "सठकॊपन्" एनृ ओरॆ पेयर्. नम्माऴ्वार् वॆदत्तैत्
तमिळाकच् चेय्तु एल्लॊरुम् सोल्लुम्बडियागप्पण्णिनार्. नी वॆतत्तिनुडैय अर्थ्थमान् पेरुमाळैच् सण्डाळन् कूड शॆविक्कुम् पडियाक वीदियिलॆ एऴुन्थरुळप्पण्णिक्कोण्डु वन्दाय्.

Thursday, August 20, 2009

स्लोकँ 22

द्रमिडॊपनिषन्निवेशशून्यान्
अपि लक्षमिरमाणाय रोचयिष्यन्
ध्रुवमाविशति स्म पादुकात्मा
शठकोप: स्वयमेव माननीय:

த்ரமிடோபநிஷந் நிவேசசூந்யாந்
அபி லக்ஷ்மீரமணாய ரோசயிஷ்யந்
த்ருவமாவிசதி ஸ்ம பாதுகாத்மா
சடகோப: ஸ்வயமேவ மாநநீய:


எல்லோரும் பெருமாளையடையவேண்டுமென்று
எண்ணங்கொண்டு நம்மாழ்வார் திருவாய்மொழி செய்தருளினார்.
அந்தத்திருவாய்மொழியையும் சிலர் நெட்டுருபண்ணுகிறதில்லை.
அவர்களும் பெருமாளையடைவதற்காக ஆழ்வார் பாதுகையாக அவதரித்தார். அதாவது எல்லோரும் பெருமாளையடைவதற்காக
ஸந்நிதிகளில் பாதுகையை எல்லோருக்கும் ஸாதிக்கிறார்கள்.
அதனால் பாதுகைக்கு சடகோபனென்று பெயர்

एल्लोरुम पेरुमाळैयडैयवेडुमेन्रु एण्णङकोण्डु नम्माळ्वार तिरुवाय्मोळि सेय्तरुळिनार्. अन्दत्तिरुवाय्मोळियैयुम सिलर नेठ्ठ्रु पण्णुकिरतिल्लै. अवर्गळुम पेरुमाळैयडैवतरक्काक आळ्वार पादुकैयाक अवदरित्तार्. अथावतु एल्लॊरुम पेरुमाळैयडैवतर्काक सन्निथिगळिल पादुकैयै एल्लॊरुक्कुम साथिक्किरार्गळ्. अतनाल् पातुकैक्कु शठकोपनेन्रु पेयर्

Saturday, August 15, 2009

समाख्यापद्धति:द्वितीया
சமாக்யா பத்ததி
समाखयाप्द्धति: द्वितिया சமாக்யாபத்ததி
वनदे विष्णु पदासक्तं तम्रुषिं ताञ्च पादुकाम्
यथार्थ शठजितसंञा मच्चित्त विजयाद्ययो:
வந்தே விஷ்ணு பதாஸக்தம் தம்ருஷிம் தாம்ச பாதுகாம்
யதார்த்தா சடஜித்ஸம்ஜ்ஞா மச்சித்த விஜயாத்யயோ:
பாதுகைக்கு“சடாரி” என்று திருநாமம் வந்ததற்கு காரணம்
ஸாதிக்கிறார்.சடஜித் என்றால் துஷ்டனை ஸ்வாதீனம் பண்ணிக்கொண்டவனென்று அர்த்தம். மிகவும் துஷ்டனான என்னை பாதுகையும் ஆழ்வாரும் கெட்ட வழிகளில் செல்லாமல் நல்ல வழிகளில் செல்லும்படி செய்த படியால் அவ்விருவருக்கும் அப்பெயர் வந்தது. நம்மாழ்வாருக்கு சடகோபனென்று திருநாமம். அந்தத் திருநாமம் பாதுகைக்கு எப்படி வந்ததென்பதற்கு காரணம் ஸாதித்தார்.சடனென்ற அஸுரனைப் பாதுகை ஜயித்தபடியால் பாதுகைக்கு “சடகோப”னென்ற திருநாமம் வந்தது. இவ்விஷயம் ஸ்ரீபாஞ்சராத்ர ஸம்ஹிதையில் சொல்லப் பட்டிருக்கிறதென்று சொல்லுகிறார்கள்.

पादुकैक्कु “शठारि” एन्ऱु तिरुनामँ वन्ददर्कु कारणम सातिक्किरार्. शठजित एन्राल तुषठनै स्वादिनम पण्णिक्कोणडवनेन्रु अर्तम्. मिगवुम तुषठनान एन्नैप पादुकैयुम आऴ्वारुम केठ्ठ वऴिकळिल सेल्लामल नल्ल वळिकळिल सेल्लुम्बडि सेयत पडियाल अव्विरुवरुक्कुम अप्पेयर वन्ततु. नम्माळवारुक्कु शठकोपनेन्ऱु तिरुनामम्.इव्विषयम श्रीपाञ रात्र शँहितैयिल् सोल्लप्पठ्ठतेन्रु सोल्लुकिरार्गळ्.

Saturday, August 8, 2009

ஸ்லோகம் 20
த்வயி விஹிதா ஸ்துதிரேக்ஷா பதரக்ஷிணி பவதி ரங்கநாதபதே
ததுபரி க்ருதா ஸபர்யா நமதாமிவ நாகிநாம் சிரஸி

श्लॊकम् २०
त्वयि विहिता स्तुतिरॆषा पदरक्षिणि भवति रङ्गनाथपदॆ
तदुपरि कृता शपर्या नमतामिव नाकिनाम् शिरसि
ஏ பாதுகையே ! முன் ஒரு சமயத்தில் அர்ஜூனன் ஸ்ரீக்ருஷ்ணன் திருவடியில் சிவனுக்குப் பண்ணவேண்டிய பூஜையைச் செய்தானாம். அது மறுநாள் தன்னுடைய பூஜைப் பெட்டியிலிருக்கிற சிவன் தலையிலிருந்ததாம். அதைப்பார்த்து அதிகமாய் ஆச்சர்யப்பட்டானாம். பெருமாள் திருவடியிலே பூஜை செய்தபடியால் திருவடிக்கும் ஆயிற்று, சிவன் முடிக்கும் ஆயிற்று. அந்தமாதிரி உன்னை நான் ஸ்தோத்ரம் பண்ணினால், உனக்கும் ஆகிறது., திருவடிக்கும் ஆகிறது. ஆசார்யர்களை ஸ்துதித்தால் பெருமாளுடைய திருவுள்ளமுகக்கும். திருவடியைப்பற்றி ஸ்தோத்ரம் பண்ணுகிறவருக்கு ஒரு ஆயிரம் தானாகும். எனக்கோ இரண்டாயிரமாகிறது.

ए पादुकैये मुन ओरु समयत्तिल् अरजुनन श्री क्रुश्णन तिरुवडियिल सिवनुक्कुप पण्णवेण्डिय पुजैयै चेयतानाम्. अतु मरुनाळ तन्नुडैय पूजैप पेट्टियिलिरुक्किर सिवन तलैयिलिरुन्तताम्. अतैप्पार्तु अदिकमाय आच्चर्यप्पट्टानाम्. पेरुमाळ तिरुवडियिले पुजै सेयतपडियाल तिरुवडिक्कुम आयिर्रू. सिवन मुडिक्कुम आयिऱ्ऱु. अन्द मातिरि उन्नै नान स्तोत्रम पण्णिनाल उनक्कुम अगिरतु, तिरुवडिक्कुम आगिरतु.आचार्यरकळै स्तुतित्ताल पेरुमाळुडैय तिरुवुळ्ळमुकक्कुम्.
तिरुवडियैप्पर्रि सतोत्रम पण्णुकिरवरुक्कु ओरु आयिरम तानाकुम्. एनक्को इरण्डायिरमागिरतु.

Friday, August 7, 2009


ஸ்லோகம் 19
அநுக்ருதநிஜநாதாம் ஸூக்திமாபாதயந்தீ
மநஸி வசஸி ச த்வம் ஸாவதாந மம ஸ்யா:
நிசமயதி யதாஸௌநித்ரயா தூர முக்த:
பரிஷதி ஸஹ லக்ஷ்ம்யா பாதுகே ரங்க நாத:

अनुकृतनिजनादां सूक्तिमापादयन्ति
मनसि वचसि च् त्वं सावधाना मम स्या:
निशयमति यथासौ निद्रया दूरमुक्त:
परिषति सह लक्ष्मया पादुके रङ्गनाथ:



ஏ பாதுகையே இராத்ரியில் இந்தக்ரந்தத்தைப் பண்ணும்படி நியமித்தாய். உன்னுடைய சப்தம் போல (ஆழ்வாருடைய ஸூக்திபோல) பெருமாளுக்கு மிகவும் இன்பமான வார்த்தைகள் தாமதமில்லாமல் மனதில் தோன்றி அதிவேகமாய் வாக்கில் வரும்படியாக நீ தயை செய்யவேண்டும். இதின் ஸ்வாராஸ்யத்தாலே தாயாருக்கும் பெருமாளுக்கும் தூக்கம் மறந்து போய் ஸபையிலே கேட்டுக்கொண்டிருக்கவேண்டும்

ऎ फातुकैयॆ इरात्रियिल् इन्तक्रन्त्त्तैप् पण्णुम्बडि नियमित्ताय्. उन्नुडैय सब्थम् पॊल (आऴ्वारुडैय शूक्तिपॊल) पेरुमाळुक्कु मिगवुम् इन्बमान वार्त्तैगळ् दमतमिल्लामल् मनथिल् थॊनि अथिवॆकमाय् वाक्किल् वरुम्बटियाग नी दयै
चेय्यवॆण्डुम्. इथिन् स्वरास्यत्ताले पेरुमालुक्कुम् तायारुक्कुम् तूक्कम् मरन्तु पॊय सभैयिले केट्टुकोणडिरुक्कवेण्दुम्


Monday, August 3, 2009

ஸ்லோகம் 18
அபார கருணாம்புதே: தவகலு ப்ரஸாதாதஹம்
விதாதுமபி சக்னுயாம் சதஸஹஸ்ரிகாம் ஸம்ஹிதாம்
ததாபி ஹரிபாதுகே தவ குணெள கலேசஸ்திதே:
உதாஹ்ருதிரியம் பவேதிதி மிதாபி யுக்தா ஸ்துதி

अपार करुणाम्बुधेस्तव कलु प्रसादादहम
विधातुमपि शक्नुयाम् शतसहस्रिकां संहिताम्
तथापि हरिपादुके तव गुणौघलेशस्थिते:
उदाह्रुतिरियम् भवेदिति मितापि युक्ता स्तुति
:

ஏ பாதுகையே! ஒரு ஸ்வாமி முகமாய் ஆயிரம் ஸ்லோகம் பண்ணும்படி நியமித்தாய். கருணைக் கடலான உன்னுடைய தயையினாலே லக்ஷம் ஸ்லோகமும் பண்ணலாம். லக்ஷம் பண்ணினாலும் உன்னுடைய குணங்கள் சொல்லிற்றாகுமா? ஆகையினால் கொஞ்சமாகாத்தான் இருக்கட்டுமே என்று நியமித்தாய் போலும்.

ए पादुकैये ओरु स्वामि मुकमाय् आयिरं स्लोकम् पण्णुम्बडि
नियमित्ताय्. करुणैक्क्डालान उन्नुडैय दयैयिनाले लक्शं
स्लोकमुम् पण्णलाम. लकशं पण्णिनालुम् उन्नुडैय
गुणङ्गळ् मुशुमैयुम् सोल्लिरराकुमा?
आगैयिनाल् कोन्जमाकत्तान् इरुक्कट्टुमे
एन्रु नियमित्ताय् पोलुम्

Saturday, July 25, 2009

ஸ்லோகம் 17
வ்ருத்திபிர் பஹுவிதாபிராச்ரிதா
வேங்கடேச்வரகவே: ஸரஸ்வதீ
அத்ய ரங்கபதிரத்ந பாதுகே
நர்த்தகீவ பவதீம் நிஷேவதாம்

ஏ பாதுகையே ! என்னுடைய வாக்கு கூத்தாடுகிறவள் போல சில சங்கதிகளை நேரில் சொல்லியும் சில சங்கதிகளை ஜாடையாய்ச் சொல்லியும் உன்னிடத்தில் கூத்தாடவேண்டும்

व्रुतिभिर्बहुविधाभिरश्रिता
वेङ्कटेश्वरकवे सरस्वथि
अद्य रङ्गपति रत्न पादुके
नर्त्तकीव भवतीं निशेवताम्


ए पादुकैये! एन्नुदैय वाक्कु कूत्तादुकिरवळ्पॊल शिल शङगतिगळै नेरिल् शोल्लियुम् शिल शङगतिगळै जाडैयायच् शोल्लियुम् उन्निडत्तिल् कूत्ताडवेण्डुम्.

Tuesday, July 21, 2009

ஸ்லோகம் 16
அநிதம்ப்ரதமஸ்ய சப்தராசே:
அபதம் ரஙதுரீண பாதுகே த்வாம்
கதபீதிரபிஷ்டுவந் விமோஹாத்
பரிஹாஸேந் விநோதயாமி நாதம்.

अनिदं प्रथमस्य शब्दरशेः
अपदं रङ्ग धुरीण पादुके त्वाम्
गतभीतिरभिष्टुवनविमॊहात्
परिहासेन विनॊदयामि नाथम्

ए पातुकैये! वेदन्गळालुम् सोल्लिमुटियात
उन्नै ओन्द्रुम् तेरियाथ्थन्मैयाल्
बयमिल्लामल् स्तोतिरम् पण्ण आरम्बिकिरेन्.
पेरुमाळै सिरिक्कच् चेय्तु शन्दोशप् पदुथुकिरेन्
.

ஏ பாதுகையே வேதங்காளாலும் சொல்லிமுடியாத உன்னை ஒன்றும் தெரியாத்தன்மையினால் பயமில்லாமல் ஸ்தோத்திரம் பண்ண ஆரம்பிக்கிறேன். பெருமாளை சிரிக்கச் செய்து ஸந்தோஷப்படுத்துகிறேன்.

Friday, July 17, 2009

ஸ்லோகம் 15
ஹிமவந்நளஸேது மத்யபாஜாம்
பரதாப்யர்ச்சிதபாதுகாவதம்ஸ:
அதபோதநதர்மத கவீநாம்
அகிலேஷ்வஸ்மி மனோரதேஷ்வபாஹ்ய
:

हिमवन्नळ सेतुमध्यभाजाम्
भरताभ्यर्चित पातुकावतंस:
अतपोधनधर्मत: कवीनां
अखिलेषवस्मि मनोरथेषवबाह्य
:
ஏ பாதுகையே உன்னைத் தலையில் வைத்துக்கொண்டமாத்திரத்தில் ஹிமவத்பர்வதம் முதல் ஸேதுவரையிலுள்ள கவிகளெல்லாரைக் காட்டிலும் மேலாய் கவனம் பண்ணுவேன். அதாவது ஆசார்யானுக்ரஹத்தினால் எந்தக்கார்யத்தையும் ஸாதிப்பேன்.

ए पातुकैये उन्नैत् तलैयिल वैत्तुककोणड मात्तिरत्तिल्
हिमवत पर्वतम् मुतल् सेतु वरैयिलुळळ कविकळेललारैक्काटिलुम्
मेलाय कवनं पणणुवेन. अतावतु आचार्यानुग्रहत्तिनाल एन्ध
कार्याथ्थैयुम् साथिप्पेन्.

ப்ரஸ்தாவ பத்ததி-ஸ்லோகம் 14


ஸ்லோகம் 14
ரங்கக்ஷ்மாபதிரத்நபாது பவதீம் துஷ்டூஷதோ மே ஜவாத்
ஜ்ரும்பந்தாம் பவதீயசின்ஜிதஸுதாஸந்தோஹஸந்தேஹதா: லாகாகூர்ணிதசந்த்ரசேகரஜடாஜங்காலகங்காபய:
த்ராஸாதேசவிச்ருங்கல்ப்ரஸரணோத்ஸிக்தா: ஸ்வயம் ஸூக்தய:
ஏ பாதுகையே உன்னை ஸ்தோத்ரம் பண்ணவேண்டுமென்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்।உன்னுடைய அமுதம்போல் இனிமையான சப்தமோவென்று ஸந்தேஹத்தைக் கொடுப்பதாயும், பெருமாளிட த்தில் மிகவும் பக்தரான ஸர்வஜ்ஞனான சிவன் கொண்டாடும் படியுமிருக்கிற உன்னைப் பற்றின வார்த்தைகள் எனக்கு அதிகமாய் மேன்மேலுமுண்டாகவேண்டும்

रङ्ग क्षमापति रत्न पादु भवतीम् तुष्टूषतो मे जवात्
ज्रुम्भन्ताम् भवदीय सिञ्ज्तसुधा सन्दोह सन्देहदा
क्ष्लागा घूर्णित चन्द्र शेखर जटा जङ्घा गङ्गापय
त्रासादेशविश्र्ङ्खलप्रसरणोत्शिक्ता स्वयं शूक्तय :

ए पादुगैये उन्नै स्तोतिरम् पण्ण वेण्दुमेन्द्रु एण्णिक कोण्दिरुक्किरेन्
उन्नुटैय अमुतम् पोल इनिमैयान सप्तमोवेन्द्रु सन्तेहत्तैक् कोडुप्पतायुम्
पेरुमाळिदतिल् मिकवुम् भक्तरान सर्वञनान सिवन् कोण्डाडुम् बडियुमायुमिरुक्किर
उन्नैप् पट्रिन वार्तैगळ् एनक्कु अथिकमाय् मेन्मेलुम् उण्दागवेन्डुम्ए पादुगैये उन्नै स्तोतिरम् पण्ण वेण्दुमेन्द्रु एण्णिक कोण्दिरुक्किरेन्

Friday, July 10, 2009

ஸ்லோகம் 13
ஸ்லோகம் 13
நிஸ்ஸந்தேஹநிஜாபகர்ஷவிஷயோத்கர்ஷோபி ஹர்ஷோதய
ப்ரத்யூடக்ரமபக்திவைபவபவத்வையாத்யவாசாலித :
ரங்காதீச பத்த்ரவர்ண நக்ருதாரம்பைர் நிகும்பைர் கிராம்
நர்மாஸ்வாதிஷு வேங்கடேச்வர கவிர் நாஸீரமாஸிததி
ஏ பாதுகையே! நான் மிகவும் தாழ்ந்தவன் என்றும்,பாதுகைகள் அதிக உயர்ந்தவைகள் என்றும் தீர்மானமாய் தெரிந்திருக்கிறது. ஆனாலும் பாதுகைகளிடத்தில் மிகவும் அதிகமான பக்தியுண்டாக அதனால் தலை தெரியாத ஸந்தோஷமுண்டாகி ஒரு தைரியமுண்டாகியிருக்கிறது. அதனால் தாறுமாறாய் பிதற்றிக்கொண்டு விளையாடுகிறவர்களுக்குள்ளே முதலாக இருக்கிறேன்.

Monday, July 6, 2009

மிதப்ரேக்ஷாலாபக்ஷணபரிணமத்பஞ்சஷபதா
மதுக்தி: த்வய்யேஷா மஹிதகவிஸம்ரம்பவிஷயே
ந கஸ்யேயம் ஹாஸ்யா ஹரிசரணதாத்ரி க்ஷிதிதலே
முஹுர்வாத்யாதூதே முகபவநவிபூர்ஜிதமிவ

ஒரு மரம் மிகவும் பெரியாதாயிருக்கிறது. அது எவ்வளவு பெருங்காற்றடித்தாலும் கொஞ்சம்தான் சலிக்கிறது. அதை ஒருவன் வாயால் ஊதினான் ஆனால், அதைபார்த்த யாவரும் சிரிப்பார்கள். அது மாதிரி எவ்வளவோ பெரிய கவிகளால் ஸ்தோத்ரம் பண்ணக்கூடிய உன்னைப்பற்றி எனக்கு ஒரு சமயத்தில் சில ஸங்கதிகள் தோன்றுகின்றன். அதைக்கொண்டு உன்னை ஸ்தோத்ரம் பண்ணினேனேயானால், அதைக்கண்ட எல்லோரும் சிரிப்பார்கள்.

Friday, July 3, 2009



ஸ்லோகம் 11
யதேஷஸ்தெளமி த்வாம் த்ரியுகசரணத்ராயிணி ததோ
மஹிம்ந: கா ஹாநிஸ்தவ மம து ஸம்பந்நிரவதி:
சுநா லீடா காமம் பவது ஸுரஸிந்தூர் பகவதீ
ததேஷா கிம்பூதா ஸ து ஸபதி ஸந்தாபரஹித:
ஏ பாதுகையே நாய் கங்கையில் தண்ணீர் குடித்தால் அதற்கு இகபர ஸெளக்யமுண்டாகிறது. கங்கைக்கு கொஞ்சமேனும் குறைவில்லை. அதுபோல நான் உன்னை ஸ்தோத்ரம் பண்ணினால் உனக்கு ஒன்றும் குறைவில்லை. எனக்கு ஸகல ஸெளக்யங்களும் வருகிறது.





ப்ரஸ்தாவ பத்ததி ஸ்லோகம்-10
ச்ருதப்ரஜ்ஞஸம்பந்மஹிதமஹிமாந: கதிகதி
ஸ்துவந்தி த்வாம் ஸந்த: ச்ருதிகுஹரகண்டூஹரகிர:
அஹம் த்வல்பஸ் தத்வத் யதிஹ பஹு ஜல்பாமி ததபி
த்வதாயத்தம் ரங்கக்ஷிதிரமணபாதாவநி விது:

ஏ பாதுகையே! சாஸ்திரங்களையறிந்து இயற்கையாகவே புத்திசாலிகளாயும் கேட்கிறவர்களுக்கு ,இகவும் இன்பமாகப் பேசக்கூடியவர்களாயுமிருக்கிற எவ்வளவோ பெரியோர்கள் உன்னை ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள். ஒன்றும் தெரியாத நான் அவர்களைப்போலவே தாறுமாறாகவே பிதற்றுகிறேன். அப்படிபிதற்றுகிறதும் உன் அதீனம் தானென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.

Sunday, June 28, 2009

1.ப்ரஸ்தாவ பத்ததி-ஸ்லோகம்-8
அச்ரத்தாநமபி நந்வதுநா ஸ்வகீயே
ஸ்தோத்ரே நியோஜயஸி மாம் மணிபாதுகே த்வம்
தேவ:ப்ரமாணமிஹ ரங்கபதிஸ் ததாத்வே
தஸ்யைவ தேவி பதபங்கஜயோர் யதா த்வம்.
ஏ பாதுகையே உன்னை ஸ்தோத்ரம் பண்ணவேண்டுமென்று எனக்கு ஆவலில்லை. நீ வலுவிலே பண்ணச்சொல்லுகிறாய். நீ பெருமாள் திருவடிக்கு எவ்விதமாயிருக்கிறாயோ அதை அந்த ரங்கநாதன் எனக்குச் சொல்ல வேண்டும். பாதுகையினுடைய குணம், போட்டுக்கொண்டவர்கள் சொன்னால்தானே பிறருக்குத்தெரியும். பிராட்டி பெருமாள் ஸ்ரீபாஷ்யகாரர் முதலானவர்களை ஸ்தோத்ரம் பண்ணினேன். அந்தமாதிரி ஆழ்வார் ஸ்தோத்ரம் என்று ஒன்றும் நான் பண்ணவில்லை. எனக்கும் இன்னும் எல்லோருக்கும் க்ஷேமத்திற்காக ஆழ்வார் பெருமாள் விஷயத்தில் இருக்கிற இருப்பை எனக்கு எவ்விதமாகச் சொல்லத்தெரியும். ஸ்ரீரங்கநாதன் தான் தோன்றப் பண்ணவேண்டும்.

ஸ்லோகம் 9
யதாதாரம் விச்வம் கதிரபி ச் யஸ்தஸ்ய பரமா
தமப்யேகா தத்ஸே திசஸி ச கதிம் தஸ்ய ருசிராம்
கதம் ஸா கம்ஸாரேர் த்ருஹிணஹரதுர்போதமஹிமா
கவீநாம் ஷூத்ராணாம் த்வமஸி மணிபாது ஸ்துதிபதம்.
பாதுகையே எல்லா லோகத்தையும் பெருமாள் தூக்குகிறார். அவரை நீயொருவளாயே தூக்குகின்றாய். எல்லா ஜீவர்களும் பெருமாளைத் தான் போய்சேரவேண்டும். அந்தப்பெருமாள் ஓரு இடத்துக்குப் போகவேண்டுமானால் உன்னைச் சாற்றிக்கொண்டு தான் போகவேண்டியிருக்கிறது. ப்ரமன், சிவன் முதலானவர்களாலுங்கூட உன்னுடைய பெருமையையறியமுடியாது.அப்படியிருக்க, என்னைப்போன்ற அற்பக்கவிகள் உன்னை எவ்விதமாய் ஸ்தோத்ரம் பண்ணமுடியும். ஆழ்வார் பரத்தில் தூங்குகிறவஸ்து ஆத்மா. தூக்கப்படுகிறது சரீரம். ஸகல லோகத்துக்கும் பெருமாள் ஆத்மா. அந்தப் பெருமாள் ஞானியான ஆழ்வார் ஆத்மா. ஆழ்வார் அநுக்ரஹத்தினால்தான் ஒருவனிடத்தில் பெருமாள் வருகிறார். ப்ரம்மா, சிவன் முதலானவர்கள் ஐச்வர்யத்தை ஆசைப்படுகிறார்கள். ஆழ்வாருக்குப் பெருமாளைத்தவிர வேறொரு பதார்த்தமும் வேண்டாம். அந்தஆழ்வாரை மூடனான நான் எப்படி ஸ்தோத்ரம் செய்வேன். பெருமாள் சொல்லிக் கொடுத்தால்கூட என்னால் முடியாது..

Friday, June 26, 2009



1.ப்ரஸ்தாவ பத்ததி-ஸ்லோகம் 6
தத்தே முகுந்தமணிபாதுகயோர் நிவேசாத்
வல்மீகஸம்பவகிரா ஸமதாம் மமோக்தி:
கங்காப்ரவாஹபதிதஸ்ய கியாநிவ ஸ்யாத்
ரத்யோதகஸ்ய யமுநாஸலிலாத் விசேஷ
:
கங்கையிலே மழைபெய்து வீதி ஜலமும் விழுகிறது, யமுனா ஜலமும் விழுகிறது. இரண்டையும் ஒரே மாதிரியாகவே கங்கா ஜலமெண்று கொண்டாடுகின்றார்கள். அதே மாதிரி நான் தாழ்ந்தவனாயிருந்தாலும், என் வார்த்தையானது பாதுகாஸ்தோத்ரமாயிருப்பதால் வால்மீகி செய்த ஸ்ரீமத் ராமாயணத்தைப்போல பெருமையடையும். அதாவது,எல்லாரும் த்ருஷ்டாதிருஷ்ட ஸகல புருஷார்த்தத்துக்காக ஸ்ரீமத் ராமாயணத்தைப் பாராயணம் பண்ணுகிறார்கள். அதுபோல இந்தக்ரந்தமும் பாராயணம் பண்ணினால் சகலமான நல்ல பலன்களையும் கொடுக்கும்.

ஸ்லோகம் -7
விஜ்ஞாபயாமி கிமபி ப்ரதிபந்நபீதி
:
ப்ராகேவ ரங்கபதிவிப்ரமபாதுகே த்வாம்
வ்யங்க்தும் க்ஷமாஸ் ஸதஸதீ விகதாப்யஸூய:
ஸந்த:ஸ்ப்ருசந்து ஸதயை:ஹ்ருதயை:ஸ்துதிம் தே

ஏ பாதுகையே! முன்னதாகவே விஜ்ஞாபனம் பண்ணுகிறேன். பயமாயிருக்கிறது. இது நல்லது இது பொல்லாதது என்று கண்டுபிடிக்கும்படியான ஸாமர்த்தியமுள்ளவர்களும் பொறாமையில்லாதவர்களுமான பெரியோர்கள் என்னிடத்தில் தயை பண்ணி நான் செய்கிற உன்னுடைய ஸ்தோத்ரத்தை கேட்கவேண்டும்.

Wednesday, June 24, 2009

ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம்-ப்ரஸ்தாவ பத்ததி


ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீநிவாஸ ராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே வேதாந்த ராமானுஜ மஹாதேசிகாய நம:

ப்ரஸ்தாவ பத்ததி

திவ்யஸ்தாநாத் த்வமிவ ஜகதீம் பாதுகே காஹமாநா
பாதந்யாஸம் ப்ரதமமநகா பாரதீ யத்ர சக்ரே;
யோகக்ஷேமம் ஸகல ஜகதாம் த்வய்யதீநம் ஸ ஜாநந்
வாசம் திவ்யாம் திசது வஸூதாச்ரோத்ர ஜன்மா முநிர் மே.4
ஓ பாதுகையே! ப்ரம்மலோகத்திலிருந்து ஸ்ரீரங்கநாதனை நீ திருவயோத்திக்கு எழுந்தருளப்பண்ணிக்கொண்டு வந்தாய். உன்னைப்போலவே ஸரஸ்வதி தேவியும் வரும்பொழுது முதலிலே வால்மீகிதான் உன்னைப்பற்றிக் கவனம் பண்ணினார். ஸ்ரீமத் ராமயணத்துக்கு ஆதிகாவ்யமென்று பெயர். எல்லா லோகங்களுடைய ஸகல க்ஷேமமும் உன் அதீநமென்று வால்மீகி மஹரிஷியானவர்,எனக்கு நல்வார்த்தையக் கொடுக்கவேண்டும்.


நீசேபி ஹந்த மம மூர்த்தநி நிர்விசேஷம்
துங்கேபி யந்நிவிசதே நிகமோத்தமாங்கே
ப்ராசேதஸப்ரப்ருதிபி:ப்ரதமோபகீதம்
ஸ்தோஷ்யாமி ரங்கபதிபாதுகயோர் யுகம் தத் 5
ஸ்ரீரங்கநாதனுடைய பாதுகைகள் மிகவும் உயர்ந்தன். நான் மிகவும் தாழ்ந்தவன். அவைகளை ஸ்ரீவால்மீகி முதலான அனேக பெரிய ருஷிகள் ஸ்தோத்ரம் பண்ணியிருக்கிறார்கள். அவைகளை நான் ஸ்தோத்திரம் பண்ணினாலும் அப்பாதுகைகளுக்கு மனதில் வருத்தமுண்டாகாது, ஸந்தோஷமாயிருக்கும். ஏனென்றால், இந்தப்பாதுகைகள் வேதத்தின் தலையிலே, அதாவது உபநிஷத்தில் இருக்கின்றன. அதாவது உபநிஷத்துகள் பாதுகைகளைப்பற்றி சொல்லுகின்றன். மிகவும் தாழ்ந்த என்தலையிலுமிருக்கின்றன.அதாவது
ஸ்ரீபாதுகையை உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்கிற வித்தியாசமில்லாமல் எல்லோருக்கும் சாதிக்கிறார்கள். அதில் பாதுகைகளுக்கு வருத்தமில்லை. எல்லோருக்கும் செளக்யமுண்டாகிறதென்று ஸந்தோஷமே. ஆதலால் நானும் ஸ்தோத்ரம் பண்ணுகிறேன்.









Tuesday, June 23, 2009

1 ப்ரஸ்தாவ பத்ததி-ஸ்லோகம் 3


வர்ணஸ்தோமைர் வகுள ஸுமநோ வாஸனா முத்வஹந்தீம்ஆம்நாயான் ப்ரக்ருதிமபராம் ஸம்ஹிதாம் த்ருஷ்டவந்தம்;
பாதே நித்யப்ரணிஹிததியம் பாதுகே ரங்கபர்த்து:த்வம்நாமனம் முநிமிஹ பஜே த்வாமஹம் ஸ்தோதுகாம:


திருவாய்மொழி என்பது தமிழ்வேதம்.எப்பொழுதும் ஸ்ரீரங்கநாதனுடைய திருவடியையே நினைத்துக்கொண்டிருந்த நம்மாழ்வார் அந்த வேதத்தைக் கண்டுபிடித்தார்.ஸ்ரீரங்கநாதன் பாதுகையென்று சொல்லப்பப்டுகிற அவரை இந்த ஸ்தோத்டம் விக்னமில்லாமல் முடிவதற்காக முதலில் த்யானிக்கிறேன்.

Monday, June 22, 2009


ப்ரஸ்தாவ பத்ததி

ஸ்லோகம் 2

பரதாய பரம் நமோஸ்து தஸ்மை

ப்ரதமோதாஹரணாய பக்திபாஜாம்

யதுபஜ்ஞமசேஷத: ப்ருதிவ்யாம்

ப்ரதிதோ ராகவபாதுகாப்ரபவ:


ஸ்ரீபரதாழ்வானால்தான் ஸ்ரீராமானுடைய பாதுகைகளுக்கு இவ்வளவு சக்தியிருக்கிறதென்பது எல்லாவுலகத்திற்கும் தெரிந்தது. ஆகையால் ஸ்ரீபரதாழ்வாரைத்தான் ஸேவிக்கிறேன்.ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் முதல் அங்கத்தில் இருபத்தைந்தாவது ஸ்லோகத்தில் அருளிச்செய்தபடி “பரத” என்பது நாதமுனிகளைச் சொல்லுகிறது. அதனால், ஸ்ரீநம்மாழ்வாருடைய பெருமை ஸ்ரீநாதமுனிகளால்தான் உலகத்திற்கு தெரிந்தது "பரத” என்பதால் தெரியப்படுத்தபட்டதில் பாவ, ராக, தாள் என்கிற மூன்று ஸங்கதிகளிலேயும் மஹாபண்டிதராகிய நாதமுனிகளை ஸேவிக்கிறேன்

Sunday, June 21, 2009

1.ப்ரஸ்தாவ பத்ததி




ஸ்ரீ:


ஸந்த:ஸ்ரீரங்கப்ருத்வீச சரணத்ராணசேகரா:


ஜயந்தி புவனத்ராண பதபங்கஜரேணவ: .1.




ஸ்ரீரங்கநாதன் பாதுகைகளை பரமஸந்தோஷத்துடன் சிரஸில் வைத்துக்கொள்ளுகிற பெரியோர்களுடைய திருவடிதூள்கள் எல்லா லோகத்தையும் காப்பாற்றுகிறது. அப்பேர்ப்பட்ட பெரியோர்கள் மிகவும் உயர்ந்தவர்களாயிருக்கிறார்கள்.(உட்கருத்து) நம்மாழ்வாரைக் கொண்டாடுகிறவர்கள் தாங்களும் நல்லகதியடைந்து எல்லாருக்கும் ஸகலபுருஷார்த்தங்களையும் கொடுப்பார்கள் என்பது.

Friday, June 19, 2009

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்-நம்மாண்டவன் வ்யாக்யானம்



ஸ்ரீவைஷ்ணவத் திரளுக்கு அடியேனின் ப்ரணாமங்கள்.

ஜகதாசார்யாரான தூப்புல் நிகமாந்த தேசிகன் அருளிசெய்துள்ள க்ரந்தங்கள் அனேகம்.
அவற்றுள் நித்ய பாராயணமாக பெரியோர்களால் கொள்ளப்பட்டவை அனேகம்.ஸ்ரீமதாண்டவன் சம்ப்ரதாயத்தில சமாச்ரயணக் காலத்தில் உபதேசிக்கபடும் க்ரந்தம் ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரமாகும். வகுளாபரணபெருமாளான நம்மாழ்வாரின் பெருமையை பேசும் க்ரந்தமாக பூர்வாச்சார்யர் அருளிச் செய்வர். ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்துக்கு மிகவும் எளிமையான வ்யாக்யனத்தை ஸ்ரீமத் நம்மாண்டவன் என்று கொண்டாடப்பட்ட ஸ்ரீமத் தேரழந்தூராண்டவன் வேதாந்த் ராமானுஜ மஹாதேசிகன் அருளிசெய்துள்ளார். அவ்யாக்யானத்தை சேவிக்கும்போது உருகாதார் மனம் கல்லே. அவற்றை ஆண்டவன் யாஹு குழுவில் வெளியிட்டால் வலைத்தளத்தில் பார்வையிட பலரால் முடியும் என நினைத்து இம்முயற்சியை தொடங்குகிறேன்.

தாஸன்,
சித்ரகூடம் ரங்கநாதன்.